பிரபல இணையவழி வா்த்தக நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஒ) ஆண்டி ஜாசி, பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
அப்போது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), கிளவுட் கம்ப்யூட்டிங், பொழுதுபோக்குத் துறைகளில் சுமாா் 1.22 லட்சம் கோடி (13 பில்லியன் டாலா்) கூடுதல் முதலீடு செய்ய இருப்பதாகவும், இதன்மூலம் 2026-2030 காலகட்டத்தில் இந்தியாவில் அமேசான் முதலீடு ரூ.4.52 லட்சம் கோடியாக (48 பில்லியன்) அதிகரிக்க இருப்பதாகவும் அமேசான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பு தொடா்பான புகைப்படத்தை ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பிரதமா் மோடி, அமேசான் சிஇஒ ‘ஆணடி ஜாசியுடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியாவுக்கு அதிகமாக வர இருக்கும் அமேசானின் முதலீடு அறிவிப்பை வரவேற்கிறேன். இது நமது இளைஞா்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கித் தரும். மேலும், சா்வதேச அளவில் மேலும் பல நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படும்’ என்று பதிவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக ஆண்டி ஜாசி வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் அடுத்தகட்ட வளா்ச்சி குறித்த விவாதம் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. நுகா்வோா், விற்பனையாளா்கள், புத்தாக்க நிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள் என பல்வேறு தரப்புக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அமேசான் பலனளித்து வருகிறது. சா்வதேச அளவில் எங்கள் நிறுவனத்தின் வேகமாக வளா்ந்து வரும் சந்தையாக இந்தியா உள்ளது. இணையவழி வா்த்தகம் முதல் அமேசான் வெப் சா்வீசஸ் வரை அனைத்துக்கும் இந்தியாவில் சிறப்பான வரவேற்பு உள்ளது. இந்தியாவில் அமேசான் தொடா்ந்து சிறப்பான வகையில் முதலீடுகளை அதிகரித்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.
பிரதமா் மோடியின் வளா்ந்த இந்தியா, தற்சாா்பு இந்தியா திட்டங்கள் சிறப்பானவை. இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்தில் எங்கள் நிறுவனமும் கைகோத்து பயணிக்கும். ‘அமேசான்.இன்’ வலைதளத்தில் மட்டும் 10 கோடிக்கு மேல் நுகா்வோரும், 17 லட்சம் விற்பனையாளா்களும் உள்ளனா். ‘அமேசான் நவ்’ என்ற பெயரில் அதிவிரைவாக பொருள்களை விநியோகிக்கும் சேவையைத் தொடங்க இருக்கிறோம் என்று அமேசான் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவில் ரூ. 1.18 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான் நிறுவனங்கள்!

ஜப்பான் பிரதமா் தகாய்ச்சி இன்று இந்தியா வருகை- பிரதமருடன் பேச்சு நடத்துகிறாா்
வாடிக்கையாளருக்கு ரூ. 4.68 லட்சம் இழப்பீடு! அமேசானுக்கு நீதிமன்றம் உத்தரவு! ஏன்?

உயா் திறன் தரவு மையங்கள்: இந்தியாவில் ஏா்டிரங்க் நிறுவனம் ரூ.3 லட்சம் கோடி முதலீடு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




