அமோனியா கசிந்த ஆலை: 300 மீ சுற்றளவில் வசிப்போர் வெளியேற உத்தரவு!திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்வி
/

கோலாப்பூர் மகாலட்சுமி கோயிலில் புதிய பிரதட்சண பாதை தொடக்கம்!

புகழ்பெற்ற மகாலட்சுமி கோயிலில் வளர்ச்சி பணிகள் தொடங்கிவைத்தது பற்றி..

News image

கோலாப்பூர் மகாலட்சுமி கோயிலில் அமித் ஷா - ANI

Updated On :20 ஜூன் 2026, 12:54 pm IST

கோலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற மகாலட்சுமி கோயிலில் புதிய பிரதட்சண பாதை, கோயிலைப் பாதுகாக்கும் பணிகளுக்கான அடிகல்லை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாட்டினார்.

இந்நிகழ்ச்சிக்காக அமித் ஷா, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் ஒரே காரில் பயணித்தனர்.

மகாலட்சுமி தேவியை தரிசித்த பிறகு, கோயில் வளாகத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை அமித் ஷா தொடங்கி வைத்தார். மேலும், மேற்கு மகாராஷ்டிர கோயில் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

கோலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் இச்சல்கரஞ்சி நகரில் நடைபெறும் விவசாயிகள் கூட்டத்திலும் அமித் ஷா உரையாற்ற உள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் 'மகாயுதி' (கூட்டணி) வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாஜக சார்பில் கோலாப்பூரில் இந்தப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.