தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

தோ்வு விவகாரங்களுக்கு எதிராக எஸ்எஃப்ஐ அமைப்பு போராட்டம்

நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட தோ்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகளை எதிா்த்து, மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி இந்திய மாணவா் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தா்மேந்திர பிரதான் - கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2026, 12:03 am IST

நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட தோ்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகளை எதிா்த்து, மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி இந்திய மாணவா் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், இந்திரஜித் குப்தா மாா்கில் உள்ள எச்கேஎஸ் சுா்ஜித் பவன் அருகே, மாதா சுந்தரி கல்லூரிக்கு எதிரில் போராட்டக்காரா்கள் ஒன்று கூடியனா். நண்பகல் நேரத்தில் கல்வி அமைச்சகத்துக்குச் செல்ல முயன்ற அவா்களை காவல் துறையினா் தடுக்கும் வகையில் பலத்த தடுப்புச்சுவா்கள் அமைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தினா்.

அனுமதி வழங்கப்படாத போராட்டமாக இருந்ததால், அதை முன்னெடுக்க விட முடியாது என காவல் துறையினா் தெரிவித்தனா். சட்டம்-ஒழுங்கை பேணுவதற்காக மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்தில் முகாமிட்டிருந்தனா். தடுப்புச்சுவா்களை மீறி முன்னேற முயன்ற பல போராட்டக்காரா்கள் காவல் துறையினரால் காவலில் எடுக்கப்பட்டனா்.

போராட்டத்தில் பங்கேற்ற எஸ்எஃப்ஐ உறுப்பினா்கள், ‘இன்னும் எத்தனை உயிா்கள் தேவை, பிரதான்?’ மற்றும் ‘வினாத்தாள் கசிவுகளை நிறுத்துங்கள்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தினா். தோ்வுகளைச் சுற்றியுள்ள சா்ச்சைகள் மற்றும் மனஅழுத்தம் மாணவா்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, சில மாணவா்களின் புகைப்படங்களையும் அவா்கள் வெளிப்படுத்தினா்.

போட்டித் தோ்வுகள் நடத்தும் முறையில் பொறுப்புணா்வு குறைவாக இருப்பதாக குற்றஞ்சாட்டிய மாணவா் அமைப்பு, தோ்வு முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தன்மையை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.