ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

காக்கிநாடா குழந்தை மாயம்! வீட்டு நாயின் தடயவியல் அறிக்கையாவது முடிச்சை அவிழ்க்குமா?

காக்கிநாடா குழந்தை மாயமான சம்பவத்தில் வீட்டு நாயின் தடயவியல் அறிக்கை முடிச்சை அவிழ்க்குமா என எதிர்பார்ப்பு

News image

நாய் - பிரதி படம் - Center-Center-Trivandrum

Updated On :19 ஜூன் 2026, 1:06 pm IST

ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த 2 வயது குழந்தை காணாமல் போன சம்பவத்தில், வீட்டு நாயின் தடயவியல் அறிக்கையிலாவது ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று விசாரணை அதிகாரிகள் குழம்பத்தில் இருக்கிறார்கள்.

வீட்டு நாய் மரணமடைந்த நிலையில், அதன் உடல் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை 48 மணி நேரத்தில் வெளியாகும் என்பதால், நிச்சயம் காணாமல் போன குழந்தை குறித்து ஏதேனும் ஒது துப்பு கிடைக்கலாம் என ஒட்டுமொத்த கிராம மக்களும் காத்திருககிறார்கள்.

ஜூன் 6ஆம் தேதி குழந்தை காணாமல் போன நாளிலிருந்து வீட்டின் வளர்ப்பு நாயும் காணாமல் போன நிலையில், ஒரு சில நாள்களுக்குப் பிறகு, அதாவது 9ஆம் தேதி நாய் மட்டும் திரும்பி வந்தது. நாய் மூலம் குழந்தையை கண்டுபிடிக்க முடியுமா என்று யோசித்த காவல்துறை, அதன் உடலில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தினர். அது கிட்டத்தட்ட 80 கி.மீ. வரை சென்று வந்தது, ஆனால், அப்பகுதிகளில் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும், நாயின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் இருந்ததால், அதனை காவல்துறையினர் தனிமைப்படுத்தி உணவு மட்டும் கொடுத்து வந்தனர்.

ஆனால், அந்த நாய் உணவோ தண்ணீரோ உண்ணாமல் திடீரென கடந்த 13ஆம் தேதி உயிரிழந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தது. உடனடியாக நாயின் உடல் உடல் கூராய்வு செய்யப்பட்டு, இறப்புக்கான காரணத்தை அறிய முடிவு செய்யப்பட்டது.

குழந்தை மாயமாகி, 12 நாள்களுக்கும் மேல் ஆகியும், இதுவரை ஒரு துப்பும் கிடைக்கவில்லை. டிரோன் உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி தேடும் பணி நடந்து வந்தாலும் ஒரு சிறு தடயம்கூட கிடைக்கவில்லை. மேலும், கிராமத்துக்கு அருகில் உள்ள அனைத்து வீடுகளில்கூட காவல்துறை தேடும் பணிகளை நடத்தியிருக்கிறது.

குழந்தை காணாமல் போன அன்று, வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அங்கிருந்து வெளியேறியிருக்கிறது. குழந்தையைத் தனியாகக் கண்ட கிராமத்தினர், குழந்தையைத் தூக்கி வீட்டுக்குள் விட முயன்றபோது, வளர்ப்பு நாய், அவர்களை நெருங்க விடாமல் செய்திருக்கிறது. உடனடியாக அவர்கள் ஓடிச் சென்று பெற்றோரிடம் தகவல் கொடுத்து அவர்கள் குழந்தை இருந்த இடத்துக்கு வருவதற்குள் குழந்தை மாயமாகியிருக்கிறது. அது முதல் வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை. குழந்தையுடன் காணாமல் போன நாயும் திரும்பி வந்த நிலையில், அதன் வாய்ப் பகுதி மூடாமல் திறந்தே இருந்துள்ளது. பிறகு அது உணவு அருந்தாமல் இறந்தும் விட்டது குறிப்பிடத்தக்கது.

Kakinada Child Disappearance! Will the Forensic Report on the Pet Dog Finally Crack the Case?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.