மத்தியப் பிரதேசத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
புதிய கல்வியாண்டின் தொடக்கத்தை முன்னிட்டு தொடங்கப்பட்ட பள்ளிக்குச் செல்வோம் இயக்கம் திட்டத்தின் கீழ், இந்தூரில் உள்ள அரசு சாரதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியை அவர் பார்வையிட்டார்.
அப்போது, முதல்வர் மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன், அவர்களுக்கு அவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.
மாநிலத்தில் தொடக்கக் கல்வியில் இடைநிற்றல் விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளில் பூஜ்ஜியமாக மாறியிருப்பது நமது அதிர்ஷ்டம் என்று செய்தியாளர்களிடம் யாதவ் கூறினார்.
பள்ளி மற்றும் உயர்கல்வி ஆகிய இரு துறைகளிலும் தசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் மத்தியப் பிரதேசம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
பின்னர், இந்தூரில் ரூ. 557 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும் ஐடி தொழிற்பூங்கா -3 கட்டுமானப் பணிகளை யாதவ் ஆய்வு செய்தார்.
பல்வேறு தகவல் தொழில்நுட்ப பபூங்காக்கள், உஜ்ஜைன்-இந்தூர் பெருநகரப் பகுதி திட்டம் மற்றும் இந்தூர்-பிதாம்பூர் பொருளாதார வழித்தடம் ஆகியவற்றின் மூலம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறைகளுக்கான ஒரு முக்கிய தேசிய மையமாக இந்தூர் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இத்திட்டங்கள் டிஜிட்டல் பொருளாதாரத்திற்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதோடு, மாநில அரசில் ஜல் கங்கா திட்டத்தின் கீழ் செய்யப்படும் பணியையும் முதல்வர் ஆய்வு செய்தார்.
Madhya Pradesh Chief Minister Mohan Yadav on Thursday said the dropout rate in the primary schools of the state has come down to zero over the last three years.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











