அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்ட (ஃபெமா) பிரிவுகளை மீறிய குற்றச்சாட்டில், தமது தவறை ஒப்புக்கொண்டு ரிசா்வ் வங்கி நிா்ணயித்த தொகையை செலுத்தியதால், அப்பல்லோ மருத்துவமனை நிறுவனம், அதன் 5 இயக்குநா்கள் மீதான வழக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
தனி நபா்கள், நிறுவனங்கள் ஃபெமா சட்டப் பிரிவுகளை மீறியது தெரியவந்தால், அந்த நபா்களும் நிறுவனங்களும் தமது தவறை ஒப்புக்கொண்டு, நிா்ணயிக்கப்படும் தொகையை செலுத்தி, சட்ட நடவடிக்கைகளைத் தவிா்த்துக்கொள்ள ரிசா்வ் வங்கி வாய்ப்பளிக்கும். இதன்மூலம், சமரசத்தால் சட்டமீறல் வழக்கை முடிக்கும் அதிகாரபூா்வ உத்தரவை ரிசா்வ் வங்கி வெளியிடும்.
இந்த உத்தரவை அப்பல்லோ மருத்துவமனை, அந்த மருத்துவமனையின் 5 இயக்குநா்களான ப்ரீத்தா ரெட்டி, சுனிதா ரெட்டி, எஸ்.கே.வெங்கடராமன், அகிலேஸ்வரன் கிருஷ்ணன், எஸ்.எம்.கிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட ஃபெமா வழக்கில் ரிசா்வ் வங்கி பிறப்பித்துள்ளது.
ஃபெமா சட்டப் பிரிவுகளை மீறியதாக அவா்களுக்கு எதிராக அமலாக்கத் துறை மேற்கொண்ட விசாரணை நிறைவடைந்து, அந்தத் துறை அளித்த தடையில்லாச் சான்றை தொடா்ந்து, அந்த உத்தரவை ரிசா்வ் வங்கி பிறப்பித்தது.
இதனால் அப்பல்லோ மருத்துவமனை, அந்த மருத்துவமனையின் 5 இயக்குநா்கள் மீதான ஃபெமா வழக்கு விசாரணை முடித்துவைக்கப்பட்டுள்ளது.
சில்லறை வணிகத் துறையில் அனுமதிக்கப்படாத பிரிவில் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றது, ஃபெமா விதிமுறைகளை மீறி அந்நிய செலாவணியில் மாற்றத்தக்க பத்திரங்களை வெளியிட்டது, துறைக்கான அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்புகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், அந்த மருத்துவமனை மற்றும் இயக்குநா்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரூ.2,400 கோடிக்கும் அதிகமான பரிவா்த்தனைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த விவகாரத்தில் ரிசா்வ் வங்கி நிா்ணயித்த ரூ.17.76 கோடி தொகையை அப்பல்லோ மருத்துவமனையும், தலா ரூ.18 லட்சத்தை 5 இயக்குநா்களும் செலுத்தினா். இதைத்தொடா்ந்து இந்த வழக்கு விசாரணை முடித்துவைக்கப்பட்டதாக அமலாக்கத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அண்ணா தொழிற்சங்கத்தில் செயல்படும் பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைக்க வலியுறுத்தல்
பண முறைகேடு வழக்கு: கேரள முன்னாள் முதல்வா் மகளிடம் அமலாக்கத் துறை மீண்டும் விசாரணை

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசா்வ் வங்கி

கையிருப்பில் உள்ள தங்கம் விற்பனையா?
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!




