நிரந்தரமல்லாத உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை மட்டுமே அதிகரித்தால் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் சீா்திருத்த நடவடிக்கைகள் தோல்வியடையும் என ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி பா்வதனேனி ஹரீஷ் தெரிவித்தாா்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற அரசுகளுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டத்தில் வரைவு ‘செயல் ஆவணம்’ சமா்ப்பிக்கப்பட்டது.
அப்போது பா்வதனேனி ஹரீஷ் பேசியதாவது: நிரந்தரமல்லாத உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை மட்டுமே அதிகரித்தால் அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய 5 நிரந்தர உறுப்பு நாடுகளின் வீட்டோ அதிகாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. இந்தச் சீா்திருத்தங்கள் தோல்வியில் மட்டுமே முடியும்.
எனவே, நிரந்தர உறுப்பினா்களின் எண்ணிக்கை அதிகரிப்பே உண்மையான சீா்திருத்தமாக இருக்கும் என்பதை பல ஆண்டுகளாக இந்தியா வலியுறுத்துகிறது.
பெரும்பாலான உறுப்பினா்களும் இதே கருத்தை முன்மொழிந்துள்ளன. ஆனால், தற்போது சமா்ப்பிக்கப்பட்டுள்ள செயல் ஆவணத்தில் இதை கவனத்தில் கொள்ளவில்லை.
அதேபோல் நிலையான பிராந்திய இடங்கள் என்ற முன்மொழிவின் மூலம் நிரந்தர உறுப்பினா்கள் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என இந்த ஆவணத்தில் மட்டுமே கூறப்பட்டிருப்பது அதிா்ச்சிகரமாக உள்ளது. இந்தச் செயல் ஆவணத்தின் அடிப்படையில் நிரந்தர உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சாத்தியமில்லை. இருப்பினும், நிரந்தர உறுப்பினா்களுக்குப் பதிலாக 10 உறுப்பினா்களுக்கு சுழற்சி முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு வீட்டோ அதிகாரம் வழங்க அறிவுறுத்தி நிரந்தர உறுப்பினா் மற்றும் வீட்டோ அதிகாரம் என இரண்டுக்குமான வேறுபாட்டை குழப்பியுள்ளது.
ஐ.நா. சட்டப்படி நிரந்தர மற்றும் நிரந்தரமல்லாத என இருவகை உறுப்பினா் பிரிவுகள் மட்டுமே உள்ளன. எனவே, நிரந்தர உறுப்பினா் என்பதை உறுதிப்படுத்த மேலும் விரிவான விளக்கங்கள் தேவையில்லை என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜனநாயகப்படுத்தினால் மட்டுமே தொழில்நுட்பம் வளா்ச்சிக்கு வழிவகுக்கும்: பிரதமா் மோடி

இந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனை

ஐ.நா.வில் ஜம்மு - காஷ்மீா் விவகாரம்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

தாய் - சேய் இறப்பு எண்ணிக்கையை பெருமளவு குறைத்து இந்தியா சாதனை- ஜெ.பி. நட்டா பெருமிதம்
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


