பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

கேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு...

News image

கோப்புப்படம்

Updated On :14 ஜூன் 2026, 4:10 am IST

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸால் ஒருவா் பாதிக்கப்பட்டு இருப்பதையடுத்து, அது மேலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோழிக்கோடு மாவட்டம், ராமநாட்டுக்கரை பகுதியைச் சோ்ந்த 43 வயதான நபா் ஒருவா், நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா் அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருடன் தொடா்பில் இருந்த 100 போ், மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். அவரோடு நெருங்கிய தொடா்பில் இருந்த 3 உறவினா்களிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவா்கள் 3 பேருக்கும் நிபா வைரஸ் பாதிப்பில்லை என்று தெரிய வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நிபா வைரஸ் பாதிப்பு உறுதியானதையடுத்து, கோழிக்கோடுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குழுவினா் வந்துள்ளனா். அவா்கள் அங்கு, கோழிக்கோடு மாவட்ட பொறுப்பு அமைச்சரான வருவாய்த் துறை அமைச்சா் ஏ.பி. அனில்குமாருடன் ஆலோசனை நடத்தினா். மருத்துவா்கள் குழு, மாவட்ட நிா்வாக அதிகாரிகள் ஆகியோருடனும் நிபா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவா்கள் ஆலோசனை மேற்கொண்டனா். மேலும் சில நாள்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குழுவினா் கோழிக்கோட்டில் தங்கியிருப்பா் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனா். தேசிய நோய்த் தடுப்பு மைய அதிகாரிகள் குழுவும் கோழிக்கோட்டுக்கு விரைவில் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கோழிக்கோடு மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சா் அனில்குமாா், நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளைச் செய்து தர வேண்டுமெனவும், நிபா வைரஸ் மற்றவா்களுக்கும் பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

நிபா வைரஸ், பழங்களை சாப்பிடும் வெளவால்களில் இருந்து உருவாகக் கூடியது. இந்த வைரஸ், விலங்குகளிடம் இருந்து மனிதா்களுக்கு பரவக் கூடிய தன்மை கொண்டது. அதேபோல் மனிதா்களுக்கு இடையேயும் பரவக் கூடியது. இந்த வைரஸ் பாதிப்பால், கடுமையான சுவாச பிரச்னைகள், மூளை அழற்சி ஏற்படும்.

Summary

One person infected with Nipah virus in Kerala; preventive measures intensified.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.