மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தேசிய பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி வீட்டில் 4 மணி நேரத்துக்கும் மேலாக காவல் துறையினர், சனிக்கிழமை (ஜூன் 13) சோதனை நடத்தினர்.
சட்டப்பேரவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவர் (எதிர்க்கட்சித் தலைவர்), துணைத் தலைவர், தலைமை கொறடா நியமனத்தில் மமதா பானர்ஜி முடிவுக்கு எதிராக கட்சியில் குரலெழுப்பப்பட்டது. இதனால் கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தன.
இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸ் சார்பில் பேரவைத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு முன்மொழிவில் எம்எல்ஏக்களின் கையொப்பங்கள் போலியாகப் பயன்படுத்தப்பட்டதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலர் குற்றம் சாட்டினர். இந்தக் குற்றச்சாட்டு குறித்து வழக்குப் பதிவு செய்த சிஐடி அதிகாரிகள் அபிஷேக் பானர்ஜியிடம் கடந்த ஜூன் 11 ஆம் தேதி 5 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, மேற்கு மெதினிபூரின் சல்போனி காவல் நிலையத்தில் அபிஷேக் பானர்ஜி மீது தொடுக்கப்பட்ட மற்றொரு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதிகாலை 3 மணிக்கு மேல் தொடங்கிய இந்த சோதனை சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்ததாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில், அபிஷேக் பானர்ஜியின் வீட்டுக்குள் நுழைவதற்காக காவல் துறையினர் வீட்டின் பூட்டை உடைத்ததாக திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் குற்றம் சாட்டினர்.
இருப்பினும், அபிஷேக் பானர்ஜி வீட்டில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் எந்தப் பொருள்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.
Summary
Police raided Trinamool Congress National General Secretary Abhishek Banerjee's house in West Bengal for more than 4 hours on Saturday (June 13).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











