இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்!

துபை-அகமதாபாத் விமானத்தின் ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

News image

Photo grab ANI Video.

Updated On :13 ஜூன் 2026, 7:09 pm IST

துபை-அகமதாபாத் விமானத்தின் ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

துபையில் இருந்து அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ விமானத்தை சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை செய்துள்ளனர்.

அப்போது விமானத்தின் முன்பக்க கழிப்பறையில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸிற்குள், கருப்பு நிற பிளாஸ்டிக் டேப்பால் சுற்றப்பட்ட இரண்டு பொட்டலங்களைக் கைப்பற்றினர்.

அதில, 2.7 கிலோவிற்கும் அதிகமான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் இந்திய மதிப்பு ரூ. 4.26 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் பொறியாளர்களின் உதவியுடன் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில் இந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

தங்கத்தை இந்தியாவிற்குள் கடத்தும் நோக்கத்துடனேயே அதனை விமானத்தின் ஸ்பீக்கரில் அடையாளம் தெரியாத யாரோ மறைத்து வைத்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

The incident occurred on board an IndiGo flight 6E-1478, which arrived at the Sardar Vallabhbhai Patel International Airport in Ahmedabad from Dubai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.