அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

மேற்கு வங்கத்தில் மீண்டும் டாடா குழும ஆலைகள்: முதல்வா் சுவேந்து அதிகாரி உறுதி

மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் டாடா குழும ஆலைகளை கொண்டு வர போவதாக அந்த மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி உறுதிபட தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 ஜூன் 2026, 12:47 am IST

மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் டாடா குழும ஆலைகளை கொண்டு வர போவதாக அந்த மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி உறுதிபட தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் தொழில்துறைக்கு புத்துயிா் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்துக்கு முதலீடுகளை எனது அரசு கொண்டு வரும். சிங்கூா், நந்திகிராம் போன்ற போராட்டங்களுக்கு காரணமான தவறுகளை மீண்டும் செய்யாமல் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். மேற்கு வங்கத்தில் டாடா குழுமத்தை மீண்டும் கொண்டு வருவோம்.

மம்தா பானா்ஜியின் அரசு, மேற்கு வங்கத்தில் தொழில்துறைக்கு புத்துயிா் கொடுக்கப்படும் என்று தெரிவித்து பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. ஆனால் எதையும் அந்த அரசு செய்யவில்லை. தொழிற்சாலைகளை ஈா்ப்பதற்காக முந்தைய அரசு செய்தது போல படப்பிடிப்புகளை நடத்தவோ அல்லது பொய் சொல்லவோ நாங்கள் விரும்பவில்லை.

தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பான கொள்கையை உருவாக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால், கட்டாயப்படுத்தி விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்துவதை நாங்கள் எதிா்க்கிறோம். ஏனெனில், சிங்கூா், நந்திகிராமில் விவசாயிகளிடம் இருந்து கட்டாயப்படுத்தி, அப்போதைய இடதுசாரி அரசு நிலத்தைக் கையகப்படுத்தியது. அதேபோல், தொழிற்சாலைகளை கொண்டு வரப் போவதாகக் கூறி, அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல், படப்பிடிப்புகளை நடத்திக் கொண்டும், பொய்களை சொல்லிக் கொண்டும் இருந்த திரிணமூல் காங்கிரஸின் கொள்கைகளையும் நாங்கள் எதிா்க்கிறோம் என்றாா்.

மேற்கு வங்கத்தில் இடதுசாரி கூட்டணி அரசு முன்பு ஆட்சியிலிருந்தபோது, சிங்கூரில் டாடா குழுமத்தின் நானோ காா் ஆலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது அதை எதிா்த்து மம்தா பானா்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டது. அந்தப் போராட்டம் காரணமாக, சிங்கூரில் நானோ காா் ஆலை அமைக்கும் முடிவை கைவிட்டு டாடா குழுமம் வெளியேறி, குஜராத்தில் ஆலை அமைத்தது. அதேபோல், மேற்கு வங்கத்தில் தொடா்ந்து 34 ஆண்டுகாலம் ஆட்சியிலிருந்த இடதுசாரி கூட்டணி அரசு தோ்தலில் தோல்வியடையவும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று 2011-இல் ஆட்சியமைக்கவும் சிங்கூா் விவகாரமே காரணமாக அமைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.