இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

ஈரானைவிட்டு உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!

ஈரானைவிட்டு உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தியது பற்றி...

News image

ஈரானைவிட்டு வெளியேற இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல் - கோப்புப்படம்

Updated On :8 ஜூன் 2026, 1:00 pm IST

ஈரானில் இருக்கும் இந்தியர்கள் கிடைக்கக் கூடிய போக்குவரத்து மூலம் அந்நாட்டைவிட்டு உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் தீர்வு கிடைக்காததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”ஈரானில் நிலவும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தலை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

தற்போது ஈரானில் உள்ள இந்திய குடிமக்கள், கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகள் மூலம் அந்நாட்டைவிட்டு உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை என்றால், அந்நாட்டை கடுமையாக தாக்கி அழித்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Story image

Summary

Embassy advises Indians to leave Iran immediately!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.