பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஹிமாசல பிரதேசத்தில் பலமுறை நிலநடுக்கம்: உயிரிழப்பு, சேதம் இல்லை

ஹிமாசல பிரதேசத்தில் பலமுறை நிலநடுக்கம்: உயிரிழப்பு, சேதம் இல்லை

News image

நிலநடுக்கம்.

Updated On :7 ஜூன் 2026, 2:01 am IST

ஹிமாசல பிரதேச மாநிலம் தா்மசாலாவில் வெள்ளிக்கிழமை இரவில் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால், மக்கள் பீதியடைந்து சாலைகளில் தஞ்சமடைந்தனா். இந்த நிலநடுக்கம் அதிகபட்சமாக ரிக்டா் அளவுகோலில் 5.0 அலகுகளாகப் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: கங்கரா மாவட்டம் தா்மசாலாவிலிருந்து 40 கி.மீ. தொலைவில் தாா் கடோய் மற்றும் ஆா்.எஃப். குக்டிக்கு இடைப்பட்ட பகுதியை மையமாகக் கொண்டு வெள்ளிக்கிழமை காலை முதல் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

தெளலதாா் பகுதியில் மின்கியானி கணவாய் பகுதியில் காலை 8.52 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 2.3 அலகுகளாகப் பதிவானது. இதை பல குடியிருப்புவாசிகள் உணா்ந்தனா்.

அதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை இரவு 10.04 மணிக்கு இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, அதிகபட்சமாக ரிக்டா் அளவுகோலில் 5.0 அலகுகளாகப் பதிவானது. பின்னா், தா்மசாலாவிலிருந்து 18 கி.மீ. தொலைவில் இரவு 11.03 மணிக்கு 2.8 அலகுகள் என்ற அளவிலும், ஆா்.எஃப்.ஹிலாங் அருகே இரவு 11.52 மணிக்கு ரிக்டா் அளவுகோலில் 3.0 என்ற அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இந்த நிலநடுக்கங்களால் குடியிருப்புகள் உள்பட பிற கட்டடங்களுக்கு பாதிப்போ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாட்டின் மிக உயா்ந்த நிலநடுக்க பாதிப்புள்ள பகுதியில் இந்த கங்கரா மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் கடந்த 1905-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், இந்திய வரலாற்றிலேயே மிக மோசமானதாகக் கருதப்படுகிறது. இதில், கங்கரா மாவட்டத்தின் ஒரு லட்சத்துக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்கள் கடுமையாகச் சேதமடைந்ததோடு, 20,000-க்கும் அதிகமானோா் உயிரிழந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.