பஞ்சாபில் இறந்தவரின் அஸ்தியைக் கரைக்க சென்றபோது ஜீப்பும் லாரியும் மோதியதில் 9 பேர் பலியாகினர்.
பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூர் மாவட்டத்தில் ஜங்காவாலா மோர் அருகே ஜீப்பும் லாரியும் இன்று நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பெரோஸ்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதில், படுகாயமடைந்த சிலர் மேல் சிகிச்சைக்காக ஃபரித்கோட்டிற்கு அனுப்பப்பட்டனர். பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 9ஆக உயர்ந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான ஜீப்பில் மொத்தம் 25 பேர் பயணம் செய்துள்ளனர். விபத்தைத் தொடர்ந்து, போலீஸ் மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடங்கின. விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய, போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இறந்த உறவினர் ஒருவரின் அஸ்தியைக் கரைப்பதற்காக ஜலாலாபாத்திலிருந்து பியாஸில் உள்ள ராதா சோமி டேராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
Summary
At least nine people were killed and around 25 others injured in a tragic road accident in Punjab's Ferozepur district on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்! இன்று பஞ்சாபில் முக்கிய 5 கோயில்களுக்கு!

வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் சென்ற பேருந்து விபத்து: ஓட்டுநர் பலி, 15 பேர் காயம்!

ஜீப் மோதியதில் விவசாயி பலத்த காயம்

பஞ்சாபில் மர்ம நபர்களால் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



