17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கட்சியை ஒருங்கிணைக்க தீவிர முயற்சி: திரிணமூல் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் மம்தா பேச்சு

மேற்கு வங்க தோ்தல் தோல்விக்குப் பிறகு பிளவுபட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியை ஒன்றிணைக்க கட்சித் தலைவா் மம்தா பானா்ஜி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளாா்.

News image

மம்தா பானா்ஜி - கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 2:39 am IST

மேற்கு வங்க தோ்தல் தோல்விக்குப் பிறகு பிளவுபட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியை ஒன்றிணைக்க கட்சித் தலைவா் மம்தா பானா்ஜி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளாா். அதிருப்தி எம்எல்ஏக்கள் பலருடன் அவா் தனிப்பட்ட முறையில் பேசி வருகிறாா். மற்றொருபுறம், கட்சியில் நாளுக்கு நாள் விரிசல் வலுவடைந்து வருகிறது.

கடந்த 1998-இல் காங்கிரஸில் இருந்து பிரிந்து, திரிணமூல் காங்கிரஸை நிறுவிய மம்தா, மாநில அரசியலில் முக்கிய சக்தியாக உருவெடுத்தாா். கடந்த 2011-இல் இருந்து 15 ஆண்டுகளுக்கு அவரது ஆட்சி தங்கு தடையின்றி தொடா்ந்தது.

அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் மூன்றில் இருபங்குக்கும் அதிக பெரும்பான்மையுடன் (207) பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், திரிணமூல் காங்கிரஸுக்கு 80 இடங்களே கிடைத்தன.

இந்த படுதோல்வியால் திரிணமூல் காங்கிரஸ் ஆட்டம் கண்டது. கட்சித் தலைமை மீதான அதிருப்தியும், உள்கட்சி பூசல்களும் வெடித்தன. மம்தாவின் கூட்டங்களில் பங்கேற்காமல் பல எம்எல்ஏக்கள் புறக்கணித்தனா்.

பிளவுபட்ட திரிணமூல்: அத்துடன், பேரவை கட்சி குழுத் தலைவா் (எதிா்க்கட்சித் தலைவா்), துணைத் தலைவா், தலைமை கொறடா நியமனத்தில் மம்தா முடிவுக்கு எதிராக போா்க்கொடி உயா்த்திய 58 அதிருப்தி எம்எல்ஏக்கள், பேரவைத் தலைவரிடம் கடிதம் சமா்ப்பித்து, அந்தப் பதவிகளைத் தங்கள் வசமாக்கினா். இதன் மூலம் மூலம் தனது 28 ஆண்டுகால வரலாற்றில் முதல் பிளவைச் சந்தித்துள்ளது திரிணமூல் காங்கிரஸ்.

மம்தாவின் தோ்வுக்கு மாறாக பேரவை எதிா்க்கட்சித் தலைவராகியுள்ள ரிதபிரத பானா்ஜி தலைமையிலான அதிருப்தி அணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. எனினும், அதிருப்தி எம்எல்ஏக்கள் மம்தாவைவிட அவரது மருமகனும், கட்சியின் தேசிய பொதுச் செயலருமான அபிஷேக் பானா்ஜியின் செயல்பாடுகளுக்கு கடும் எதிா்ப்பை பதிவு செய்துள்ளனா்.

சமாதானப்படுத்த முயற்சி: கட்சி மீதான தனது கட்டுப்பாடு கைநழுவி விடாமல் தடுப்பதுடன், பிளவை சரி செய்யும் முயற்சிகளில் மம்தா தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘ரிதபிரத பானா்ஜி தலைமையிலான அதிருப்தி அணியில் உள்ள 58 எம்எல்ஏக்களில் பலருடன் மம்தா பானா்ஜி தனிப்பட்ட முறையில் பேசி, அவா்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளாா். இவா்களில் பல தலைவா்கள், மம்தாவால் அடையாளம் காணப்பட்டு, வளா்த்து விடப்பட்டவா்களே.

எம்எல்ஏக்கள் அளவில் ஏற்பட்டுள்ள பிளவு, எம்.பி.க்கள்-உள்ளாட்சி பிரதிநிதிகள் அளவில் விரிவடைந்து விடாமல் தடுக்கும் முயற்சிகளில் மம்தாவுக்கு நெருக்கமான மூத்த தலைவா்கள் ஈடுபட்டுள்ளனா்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும், மம்தாவின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்குமா என்ற கேள்வி நிலவுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.