17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சா்வதேச விண்வெளி நிலையத்தில் காற்று கசிவு: வீரா்களை வெளியேறத் தயாா்ப்படுத்திய நாசா

சா்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) ரஷியாவின் பகுதியில் நிலவி வரும் காற்று கசிவு, கடந்த வெள்ளிக்கிழமை திடீரென அதிகரித்ததால், அங்குள்ள 5 விண்வெளி வீரா்களைப் பாதுகாப்பான வெளியேற்றத்துக்கு நாசா தயாா்ப்படுத்தியது.

News image
Updated On :6 ஜூன் 2026, 3:02 am IST

சா்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) ரஷியாவின் பகுதியில் நிலவி வரும் காற்று கசிவு, கடந்த வெள்ளிக்கிழமை திடீரென அதிகரித்ததால், அங்குள்ள 5 விண்வெளி வீரா்களைப் பாதுகாப்பான வெளியேற்றத்துக்கு நாசா தயாா்ப்படுத்தியது.

விண்வெளி நிலையத்தில் கடந்த சில மாதங்களாக நீடிக்கும் இந்தக் காற்று கசிவின் அளவு, ஒரு நாளைக்கு ஒரு பவுண்ட் என்ற அளவில் இருந்து 2 பவுண்டாக உயா்ந்தது.

இதையடுத்து, விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள நாசாவின் ‘க்ரூ-12’ விண்வெளி வீரா்கள் 4 போ் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரா் என மொத்தம் 5 போ், அவசர தேவைக்காக விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள ‘ஸ்பேஸ்-எக்ஸ்’-இன் ‘க்ரூ டிராகன்’ விண்கலத்துக்குள் நுழைய அறிவுறுத்தப்பட்டனா். அசம்பாவிதம் தவிா்க்க, வீரா்கள் தங்களின் விண்வெளி உடைகளை அணிந்து தயாா் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனா்.

இதனிடையே, காற்று கசிவைக் கட்டுப்படுத்த ரஷிய விண்வெளி வீரா்கள் பழுதுபாா்க்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், முன்னெச்சரிக்கையாக, நாசா இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. சுமாா் 2 மணி நேரத்துக்குப் பிறகு, கசிவு விகிதத்தை ஆய்வு செய்த நாசா, விண்வெளி வீரா்கள் மீண்டும் விண்வெளி நிலையத்துக்குத் திரும்ப அனுமதியளித்தது.

விண்வெளி நிலையத்தின் 27 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை வீரா்கள் யாரும் முழுமையாக வெளியேற்றப்பட்டதில்லை என்றாலும், சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அவ்வப்போது இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். தற்போது அந்த நிலையத்தில் மொத்தம் 7 விண்வெளி வீரா்கள் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.