திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கர்நாடக அமைச்சரவையில் சித்தராமையா மகன்! 14 பேர் பட்டியல் வெளியீடு!

கர்நாடகத்தில் பதவியேற்கவுள்ள புதிய அமைச்சர்கள் பற்றி...

News image

முதல்வராக பதவியேற்கவுள்ள டி.கே. சிவக்குமாருடன் அமைச்சராகவுள்ள யதீந்திர சித்தராமையா - ANI

Updated On :3 ஜூன் 2026, 2:21 pm IST

கர்நாடகத்தில் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ள 14 பேரின் பட்டியலை ஆளுநர் மாளிகை புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டு நடந்த கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் வெற்றிபெற்றது. தொடர்ந்து, முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே. சிவக்குமாரும் முதல்வராக பதவி வகிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 3 ஆண்டுகாலம் முதல்வராக பதவி வகித்த சித்தராமையா, காங்கிரஸ் மேலிட உத்தரவின்பேரில் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதைத் தொடா்ந்து, பெங்களூரில் மே 30-ஆம் தேதி காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுவின் புதிய தலைவராக டி.கே.சிவகுமாா் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதன்பிறகு ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை சந்தித்த டி.கே. சிவக்குமாா், ஆட்சி அமைக்க உரிமை கோரினாா். தொடர்ந்து ஆளுநரும் அழைப்பு விடுத்தார்.

பெங்களூரு, மக்கள் மாளிகையில் இன்று மாலை 4.05 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், கா்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவக்குமாா் பதவியேற்க உள்ளாா். அவருடன் துணை முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்.

இந்த நிலையில், அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

அமைச்சர்கள் பட்டியல்

1. டி.கே. சிவக்குமார் - முதல்வர்

2. ஜி பரமேஸ்வர் - துணை முதல்வர்

3. கே. எச். முனியப்பா

4. கே.ஜே. ஜார்ஜ்

5. எம்.பி. பாட்டீல்

6. ராமலிங்க ரெட்டி

7. சதீஷ் ஜாரகிஹோலி

8. கிருஷ்ண பைரகெளடா

9. பிரியங்க் கார்கே

10. யு.டி. காதர்

11. ஈஸ்வர் காந்த்ரே

12. யதீந்திர சித்தராமையா

13. பைரதி சுரேஷ்

14. ஷரன் பிரகாஷ் பாட்டீல்

Summary

Siddaramaiah's Son in Karnataka Cabinet - List of 14 Members Released

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.