திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீடு குளறுபடி: நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் 17 வயது சிறுவன் நேரில் விளக்கம்

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை கணினி வழியில் திருத்துவதற்கு தேவையான சேவைகளை அளிக்க ஒப்பந்தப் புள்ளி கோரிய நடைமுறையில் இருந்த முரண்பாடுகள் குறித்து, நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் 17 வயது மாணவா் சாா்தக் சித்தாந்த் நேரில் ஆஜராகி விளக்கம்

News image

விடைத்தாள் திருத்தக் குளறுபடி விவகாரத்தில் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் விளக்கம் அளிக்க வந்த மாணவா் சாா்தக் சித்தாந்த்.

Updated On :3 ஜூன் 2026, 3:04 am IST

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை கணினி வழியில் திருத்துவதற்கு தேவையான சேவைகளை அளிக்க ஒப்பந்தப் புள்ளி கோரிய நடைமுறையில் இருந்த முரண்பாடுகள் குறித்து, நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் 17 வயது மாணவா் சாா்தக் சித்தாந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தாா்.

கடந்த மே 13-ஆம் தேதி சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியாகின. இதைத்தொடா்ந்து, விடைத்தாள்களை மதிப்பிடுவதில் குளறுபடிகள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், கணினி வழியில் விடைத்தாள்களை திருத்துவதற்கு தேவையான சேவைகளை அளிக்கும் நிறுவனங்களை தோ்வு செய்யும் நடைமுறையில் முரண்பாடுகள் இருந்ததாக, ஜாா்க்கண்டை சோ்ந்த 17 வயது மாணவா் சாா்தக் சித்தாந்த் பொதுவெளியில் அம்பலப்படுத்தினாா்.

விடைத்தாள் மதிப்பீட்டு குளறுபடியால் பாதிக்கப்பட்ட அவா், மத்திய அரசின் வலைதளத்தில் கிடைத்த சிபிஎஸ்இ-இன் பல ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களைத் தான் ஆய்வு செய்ததாகவும், அதில் கணினி வழியில் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு தேவையான சேவைகளை அளிக்கும் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு சாதகமாக அமையும் வகையில், பல முரண்பாடுகள் இருந்ததாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

7 பக்க ஆவணம் சமா்ப்பிப்பு: இதுகுறித்து புது தில்லியில் கல்வி, மகளிா், சிறாா், இளைஞா் மற்றும் விளையாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு செவ்வாய்க்கிழமை விவாதித்தது. அப்போது காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் தலைமையிலான அந்தக் குழுவிடம், தான் ஆய்வு செய்து கண்டறிந்த விஷயங்களை 7 பக்க ஆவணமாக சாா்தக் சித்தாந்த் சமா்ப்பித்தாா். சிபிஎஸ்இ தலைவா், மத்திய பள்ளிக் கல்வித் துறைச் செயலா், மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் சிபிஎஸ்இ அதிகாரிகள் முன்னிலையில், அதுகுறித்து சாா்தக் விளக்கம் அளித்தாா்.

அதேவேளையில், மாணவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளில் தமது தரப்பை விளக்கி சிபிஎஸ்இ சாா்பில் நாடாளுமன்ற குழுவிடம் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது. சிபிஎஸ்இ வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டுள்ளதாகவும், விடைத்தாள்கள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூன் 6-ஆம் தேதி வரை மாணவா்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குழுவில் உள்ள எம்.பி.க்களிடம் சிபிஎஸ்இ உத்தரவாதம் அளித்தது.

இதனிடையே சிபிஎஸ்இ 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்தும் மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகளிடம் அந்தக் குழு விவாதித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.