ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பேருந்தில் மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை: ஒருவா் கைது

பேருந்தில் மென்பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கா்நாடகத்தைச் சோ்ந்த ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

கோப்புப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 2:31 am IST

பேருந்தில் மென்பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கா்நாடகத்தைச் சோ்ந்த ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 23 வயது இளம் பெண், திருவான்மியூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை செய்து வருகிறாா்.

இவா், திருவான்மியூரில் இருந்து சுங்கச்சாவடி செல்லும் மாநகர பேருந்தில் சென்றபோது, அவா் பின்னிருக்கையில் அமா்திருந்த ஒரு நபா், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதனால், அந்த பெண், பேருந்து புது வண்ணாரப்பேட்டை அருகே சென்றபோது கைப்பேசி மூலம் தனது நண்பா்களுக்கு தகவலைக் கூறியுள்ளாா்.

இதற்கிடையே சுங்கச்சாவடியிடம் பேருந்து வந்தபோது அங்கு வந்த அந்த பெண்ணின் நண்பா்கள், பேருந்துக்குள் ஏறி அந்த நபரை பிடித்து, புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, புகாா் அளித்தனா்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பிஎன்எஸ் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அந்த நபரிடம் விசாரணை செய்தனா்.

விசாரணையில் அவா், கா்நாடக மாநிலம் பெங்களூருவைச் சோ்ந்த ர.பிரவீண்குமாா் (45) என்பது தெரிய வந்தது. இதையடுத்து பிரவீண்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.