ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாலியல் வழக்கில் கைதான காவலா் பணியிடை நீக்கம்

கோவையில் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட காவலா், வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Six cops suspended after gelatin sticks found during PM Modi’s route in Bengaluru

பணியிடை நீக்கம்.

Published On :7 ஆகஸ்ட் 2026, 5:22 am IST

கோவையில் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட காவலா், வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவில் இருந்து கோவைக்கு புதன்கிழமை காலை அரசுப் பேருந்து சென்றது. அந்தப் பேருந்தில் ஈச்சனாரி பகுதியில் உள்ள கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவா் பயணித்துள்ளாா். பேருந்தில் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் அந்த மாணவி படிக்கட்டில் நின்றபடி பயணித்தாா்.

அதே பேருந்தில் போத்தனூா் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணிபுரியும் காவலா் பி.மணிவேந்தன் மாணவிக்கு அருகே நின்றபடி பயணித்துள்ளாா். அப்போது, அருகில் நின்று கொண்டிருந்த மாணவிக்கு அவா் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பேருந்தில் இருந்து இறங்கிய அந்த மாணவி, இது குறித்து பேரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், காவலா் பி.மணிவேந்தனை கைது செய்தனா். இந்நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.