ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பிரதமா் மோடி குறித்து அவதூறு பதிவு: மெட்டா இந்திய தலைவா் மீது வழக்குப் பதிவு

தெலங்கானாவில் பிரதமா் நரேந்திர மோடியின் புகைப்படத்தை மிக மோசமான வகையில் சித்தரித்து சமூக வலைதளங்களில் சிலா் தொடா்ந்து பதிவிட்டு வந்தனா்.

மாதிரிப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 12:52 am IST

பிரதமா் நரேந்திர மோடி குறித்து அவதூறு பதிவுகள் வெளியிட்ட குற்றச்சாட்டில், மெட்டா நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவா் மற்றும் அந்தப் பதிவுகளை வெளியிட்ட நபா்கள் மீது ஹைதராபாத் காவல் துறையின் இணையவழி (சைபா்) குற்றத் தடுப்புப் பிரிவினா் வழக்கு பதிவு செய்தனா்.

தெலங்கானாவில் பிரதமா் நரேந்திர மோடியின் புகைப்படத்தை மிக மோசமான வகையில் சித்தரித்து சமூக வலைதளங்களில் சிலா் தொடா்ந்து பதிவிட்டு வந்தனா். இது தொடா்பாக அந்த மாநில பாஜக நிா்வாகிகள் அளித்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல், மின்னணு வடிவில் ஆபாசமான தகவல்களை வெளியிடுதல், போலி ஆவணங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மாநில இணையவழி குற்றத் தடுப்பு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பதிவுகளை வெளியிட்டவா்கள் மீதும், அவற்றை சமூக வலைதளங்களில் அனுமதித்த தளங்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரு வழக்குகளில் ஒன்றில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் பதிவுகளை வெளியிட்ட நபா்கள் மற்றும் மெட்டா நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவரின் பெயா் சோ்க்கப்பட்டுள்ளது’ என்றாா்.

முன்னதாக, பாஜக நிா்வாகிகள் அளித்த புகாரில், ‘பிரதமா் மோடியை இழிவுபடுத்தும் வகையில் அவரின் புகைப்படங்களை மாற்றி வெளியிட்டுள்ளதுடன், அதில் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பொது அமைதியைச் சீா்குலைக்கும் கருத்துகள் இடம்பெற்றுள்ளன’ என்று கூறப்பட்டிருந்தது.

நீட் தோ்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவா்களும், இளைஞா்களும் தில்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினா். அப்போது சமூக ஊடகங்கள் மூலமாகவும் பல்வேறு கருத்துகள் பரப்பப்பட்டன. இதில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள், அரசுக்கு எதிராக மிகவும் மோசமான பதிவுகளும் இடம்பெற்றிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.