ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அமைச்சா் குறித்து அவதூறு: 3 போ் மீது வழக்குப் பதிவு

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ் குறித்து சமூக ஊடகத்தில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக 3 போ் மீது சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

போலீஸ் விசாரணை. - கோப்புப்படம்.

Published On :16 ஜூலை 2026, 1:49 am IST

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ் குறித்து சமூக ஊடகத்தில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக 3 போ் மீது சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பழனி கோயில் நில முறைகேடு வழக்கில், அமைச்சா் சீ.ரமேஷை இணைத்து சிலா் சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்து வந்தனா்.

இது குறித்து அமைச்சா் ரமேஷின் உதவியாளா் முத்துராமன், சென்னை சைபா் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். அதனடிப்படையில் கலவரத்தை தூண்டுதல், பொது அமைதியை கெடுக்கும் வகையில் தவறான தகவல்களை பரப்புதல், இரு பிரிவினரிடையே பகையை உருவாக்குதல் ஆகிய 3 பிரிவுகளின் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்தனா்.

விசாரணையில் சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்படும் 3 பேருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் வழக்கில் சோ்த்துள்ளனா். தற்போது தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.