ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி சாதாரணமான ஒன்றுதான்! மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில்!

மாணவர்கள் மீதான தடியடி குறித்து கார்கேவின் கேள்விக்கு ஜெ.பி. நட்டா பதில்...

Kharge Nadda

மல்லிகார்ஜுன கார்கே, ஜெ.பி. நட்டா - PTI

Published On :29 ஜூலை 2026, 1:01 pm IST

தில்லி போராட்டத்தில் மாணவர்களுக்கு எதிராக காவல்துறையின் நடவடிக்கை சாதாரணமான ஒன்றுதான் என்று மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா விளக்கம் அளித்துள்ளார்.

தில்லியில் கடந்த ஜூலை 20 அன்று, நாடாளுமன்றம் நோக்கி அமைதிப் பேரணி செல்ல முயன்ற சிஜேபி ஆதரவு மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தின் போது, சீருடை அணியாமல் சில காவலர்களும், பெயர் பட்டை இல்லாத சீருடையில் சிலரும் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காணொலிகள் இணையத்தில் பரவின.

இந்த நிலையில், மாநிலங்களவையில் இன்று பேசிய கார்கே, “முறையான சீருடையில் இல்லாமல் மாணவர்கள் மீது தடியடி நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் ஏன் அங்கு சென்றார்கள்? அவர்கள் யார்? அவர்களுக்கு உத்தரவிட்டது யார்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஜெ.பி. நட்டா பேசியதாவது:

“இது அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய இயல்பான சட்டம் - ஒழுங்கு சார்ந்த சூழலாகும். நான்கூட இதை ஒருமுறை அல்ல, பலமுறை எதிர்கொண்டுள்ளேன். காங்கிரஸ் ஆட்சியில் அவசரநிலைக் காலத்தில், வகுப்பறையிலிருந்தே நான் இருமுறை கைது செய்யப்பட்டேன். ஒரு மாணவர் செயற்பாட்டாளர் இதை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

சட்டம் - ஒழுங்கைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்பவர்கள் மீது காவல்துறை அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தில்லி போராட்டத்தின் போதும் காவல்துறை அதற்கேற்பவே செயல்பட்டுள்ளது. அவர்கள் இதை மிகைப்படுத்திக் காட்ட முயற்சிக்கின்றனர். இது காவல்துறை மேற்கொள்ளும் ஒரு சாதாரண சட்டம் - ஒழுங்கு நடவடிக்கையே ஆகும்” எனத் தெரிவித்தார்.

Summary

Police lathi-charge on students is a routine affair - J.P. Nadda's reply in the Rajya Sabha

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.