ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை!

மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பற்றி...

 Nadda

ஜெ.பி. நட்டா - கோப்புப் படம்

Published On :14 ஆகஸ்ட் 2026, 12:49 pm IST

மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டாவுக்கு வியாழக்கிழமை மாலை ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று (ஆக. 14), மாநிலங்களவை அலுவல்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா பங்கேற்றிருந்தார்.

இந்த நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைச்சர் ஜெ.பி. நட்டா அசெளகரியம் காரணமாக நேற்று மாலை அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“அசெளகரியம் அல்லது உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டாவுக்கு ஆகஸ்ட் 13 அன்று மாலை கரோனரி ஆஞ்சியோகிராபி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. மேலும், மருத்துவக் கண்காணிப்புக்காக இதயவியல் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Story image

Summary

Union Minister J.P. Nadda admitted to AIIMS Delhi; undergoes angiography.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.