
இன்ஃப்ளூயன்சராக பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுகிறார்: அபிஜீத் தீப்கே விமர்சனம்!
இன்ஃப்ளூயன்சராக பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுவதாக அபிஜீத் தீப்கே விமர்சித்துள்ளது பற்றி...

பிரதமர் நரேந்திர மோடி, சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே - படம் - தினமணி
இன்ஃப்ளூயன்சராக பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாகச் செயல்படுகிறார் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே புதன்கிழமை (ஜூலை 29) தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக் குளறுபடிகளுக்கு எதிராக தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து, அபிஜீத் தீப்கே இன்று தனது வீட்டுக்குத் திரும்பினார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அபிஜீத் தீப்கே பேசியதாவது:
கடந்த 36 நாள்களை ஜந்தர் மந்தரில் கழித்த பிறகு, இறுதியாக வீடுக்கு வந்துள்ளது சிறப்பாக இருக்கிறது. இவ்வளவு நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, என்னால் என் சொந்த வீட்டில் நிம்மதியாகத் தூங்கவும், என் அம்மா சமைத்த உணவை உண்ணவும் முடியும். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவைப் பொறுத்தவரை, இது போன்ற மேலும் பல மசோதாக்கள் தொடர்ந்து வரும் என்று நான் நம்புகிறேன் என்று தெர்இவித்தார்.
சமூக ஊடகங்களில் பிரதமரின் காணொளிகளைப் பார்க்கிறீர்களா என்று கேள்வி கேட்டபோது, "ஒரு இன்ஃப்ளூயன்சராக அவர் மிகச் சிறப்பாகச் செயல்படுவார் என்று நான் நினைக்கிறேன். அந்தப் பொறுப்பில் அவர் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். ஆட்சிப் பொறுப்புகளை வேறு யாரிடமாவது ஒப்படைத்து விட்டு அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகி, ஒரு இன்ஃப்ளூயன்சராக மாற வேண்டும்.
மாணவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் திரும்பப் பெறாவிட்டால், மீண்டும் நாங்கள் மற்றொரு போராட்டத்தைத் தொடங்குவோம். தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா மட்டுமே நிலைமையைச் சீராக்கும் என அரசாங்கம் நினைத்தால் அது தவறு என்று அபிஜீத் தீப்கே குறிப்பிட்டுள்ளார்.
Summary
Abhijit Deepke, leader of the Cockroach Janata Party, stated on Wednesday (July 29) that Prime Minister Narendra Modi is performing excellently as an influencer.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






