ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்... இல்லையெனில் போராட்டம் வெடிக்கும்! ஃபரூக் அப்துல்லா

சிஜேபிக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற நேஷனல் கான்பரன்ஸ் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறியது பற்றி..

 Farooq Abdullah

ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா - (கோப்புப் படம்)

Published On :29 ஜூலை 2026, 5:03 pm IST

கரப்பான் பூச்சி கட்சிக்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், இல்லையெனில் இந்தப் போராட்டம் மேலும் தீவிரமடையக்கூடும் என நேஷ்னல் கான்பரன்ஸ் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறினார்.

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் 20ல் சிஜேபி போராட்டம் நடத்தியது. இளைஞர்களின் கோரிக்கைகளை ஏற்று ஜூன் 25-ல் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து, நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுடைய குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ரூ. 1 கோடி, பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு தெரிவிக்கப்பட்ட நிலையில், சிஜேபியால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஃபரூக் அப்துல்லா பதிலளித்தார்.

சிஜேபியின் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மாறாக அவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினால், இந்தப் போராட்டம் இன்னும் பெரிதாக வெடிக்கும் என ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிகாரில் போராட்டக்காரர்கள் மீது காவலர் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த என்சி தலைவர்,

இது அனைவருக்கும் தெரியும்; அகில இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் (நேஹா) கூறியதையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள், என்றார்.

இது நிற்காது. மாணவர்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர். அவர்கள் இதை முன்னெடுத்துச் செல்வார்கள் என்று அவர் கூறினார்.

காஷ்மீரிகள் மீது வன்முறையைப் பயன்படுத்தியதை நியாயப்படுத்தி ஜந்தர் மந்தரில் சமீபத்தில் பேசியதற்காக பிடிபி தலைவர் மெஹ்பூபா முப்தி தெரிவித்த மன்னிப்பு குறித்தும் கருத்து தெரிவிக்க அப்துல்லா மறுத்துவிட்டார்.

அது குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

National Conference (NC) president Farooq Abdullah on Wednesday said the government must keep its promises to the Cockroach Janta Party (CJP), otherwise the campaign could grow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.