ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாஜக தொண்டருக்கு பதவியைவிட நாடும் இளைஞர்களும்தான் முக்கியம்: அமித் ஷா

தர்மேந்திர பிரதான் ராஜிநாமா குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியது பற்றி...

Dharmendra Pradhan | Amit Shah

தர்மேந்திர பிரதான் | அமித் ஷா - கோப்புப் படம்

Published On :26 ஜூலை 2026, 11:45 am IST

தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவை குறிப்பிட்டு, பாஜக தொண்டர்களுக்கு பதவியைவிட நாட்டின் நலன்தான் முக்கியம் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சனிக்கிழமையில் (ஜூலை 25) அவர் ராஜிநாமா செய்தார்.

இந்த நிலையில், அவரின் ராஜிநாமாவை குறிப்பிட்டு மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பதாவது, "பாஜகவின் தொண்டர்களுக்கு பதவியைவிட, நாடு, இளைஞர்கள், மாணவர்கள்தான் மிக முக்கியம். அதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா ஓர் எடுத்துக்காட்டு.

நாட்டின் இளைஞர்களின் உணர்வுகளை மதிக்கும் மோடியின் அரசு, வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு எதிராகத் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் உறுதிபூண்டுள்ளது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையை உறுதிசெய்ய மோடி அரசு எடுத்த முடிவுகள் பாராட்டத்தக்கவை.

நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு இந்த நடவடிக்கைகள் மூலம் முழுமையான நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.

தர்மேந்திர பிரதானின் பதவிக் காலத்தில் தாய்மொழிகளில் தேர்வுகள், தேசிய கல்விக் கொள்கை, பிஎம் ஸ்ரீ பள்ளிகள் விரிவாக்கம், டிஜிட்டல் கல்வியை மேம்படுத்துதல், திறன் மேம்பாடு, தொழிற்துறை - கல்வி ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் முதலானவற்றில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் அவரது உறுதிப்பாட்டுக்கு அவரின் பதவிக்காலம் ஒரு சான்றாகும்" என்று தெரிவித்துள்ளார்.

Summary

Students are more important than any post: Amit Shah On Dharmendra Pradhan's Resignation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.