ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தர்மேந்திர பிரதான் ராஜிநாமா: பாலிவுட் நடிகர்கள் வரவேற்பு!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ததற்கு பாலிவுட் நடிகர்கள் வரவேற்புத் தெரிவித்து வருகின்றனர்.

பிரியங்கா சோப்ரா, அதிதி ராவ் ஹைதரி, சோனாக்‌ஷி சின்ஹா, அலியா பட்

Published On :25 ஜூலை 2026, 7:06 pm IST

மே 3 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் முன்னரே வினாத்தாள் கசிந்ததாக நடந்து முடிந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் ஜூன் 27 ஆம் தேதியில் நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது.

இதனிடையே, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும்கூறி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தில்லியில் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்துக்கு இளைஞர்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்பதாகக் கூறி, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தார். இதற்கான கடிதத்தை பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பியுள்ளார்.

மாணவர்களின் போராட்டத்தால் மத்திய கல்வி அமைச்சர் ராஜிநாமா செய்ததற்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ததை வரவேற்கும் விதமாகப் பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா சோப்ரா பதிவு

பிரியங்கா சோப்ரா பதிவு

நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தொடக்கம் முதலே இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஜிநாமா முடிவை வரவேற்றுப் பதிவிட்டுள்ளார். மேலும், சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே விடியோவைப் பகிர்ந்து “என்ன செய்துவிட்டீர்கள் அண்ணா?” எனக் குறிபிட்டுள்ளார்.

அதேபோல, நடிகர் விஜய் வர்மா தர்மேந்திர பிரதானின் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘நான் நலமாக இருக்கிறேன்’ எனப் பாடல் வரிகளைப் பகிர்ந்துள்ளார்.

சோனாக்‌ஷி சின்ஹா, விஜய் வர்மா, ஆலியா பட் ஆகியோரின் பதிவுகள்

சோனாக்‌ஷி சின்ஹா, விஜய் வர்மா, ஆலியா பட் ஆகியோரின் பதிவுகள்

நடிகை ஆலியா பட் தனது பதிவில், ”ஜென் ஸீ தலைமுறை வந்தது. அதன்பின் நடைபெற்றது வரலாறு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை அதிதி ராவ் ஹைதரியும் தனது பதிவில் சிஜேபி போராட்டம் வெற்றி பெற்றதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதிதி ராவ் ஹைதரி பதிவு

அதிதி ராவ் ஹைதரி பதிவு

நகைச்சுவைப் பேச்சாளரும் நடிகருமான வீர் தாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஜிநாமாவை வரவேற்றுப் பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர்கள் பலரும் சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தர்மேந்திர பிரதான் ராஜிநாமாவை வரவேற்று பதிவிட்டு வருகின்றனர்.

Summary

Dharmendra Pradhan Resigns: Bollywood Actors Welcome the Move!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.