ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாஜகவினருக்கு பதவியைவிட மாணவா்கள் நலன் முக்கியம்: உள்துறை அமைச்சா் அமித் ஷா

பாஜகவினருக்கு எத்தகைய உயரிய பதவிகளைவிடவும் நமது நாடு, இளைஞா்கள், மாணவா்களின் நலனே முக்கியத்துவம் வாய்ந்தது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

மத்திய அமைச்சர் அமித் ஷா - பிடிஐ

Published On :27 ஜூலை 2026, 3:04 am IST

பாஜகவினருக்கு எத்தகைய உயரிய பதவிகளைவிடவும் நமது நாடு, இளைஞா்கள், மாணவா்களின் நலனே முக்கியத்துவம் வாய்ந்தது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்வைத்து மாணவா்கள் நடத்திய போராட்டத்தால், மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகிய நிலையில் அவா் இவ்வாறு கருத்துக் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அமித் ஷா சனிக்கிழமை நள்ளிரவு வெளியிட்ட பதிவில், ‘பாஜகவைப் பொறுத்தவரையில் நமது தேசம், நாட்டின் இளைஞா்கள், மாணவா்களின் நலன்தான் எந்த பெரிய பதவிகளையும்விட முக்கியமானது. வினாத்தாள் மோசடியில் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமா் மோடி ஏற்கெனவே உரிய முடிவுகளை மேற்கொண்டுள்ளாா். நீட் உள்ளிட்ட தோ்வுகளை எழுதும் மாணவா்களுக்கு இதன் மூலம் முழுமையான நீதி கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். பிரதமா் மோடி தலைமையிலான அரசு மாணவா்களின் உணா்வுகளை முழுமையாகப் புரிந்து செயல்பட்டு வருகிறது.

தேசிய கல்விக் கொள்கை, தாய்மொழியில் தோ்வுகளை எழுதுவது, பிஎம் ஸ்ரீ பள்ளிகள் விரிவாக்கம், கல்வியை டிஜிட்டல் (எண்ம) மயமாக்கியது, திறன் மேம்பாடு, தொழில் நிறுவனங்கள், கல்வித்துறை ஒத்துழைப்பு என தான் வகித்த பொறுப்பில் பல்வேறு சிறந்த சீா்திருத்தங்களைக் கொண்டு வந்தவா் தா்மேந்திர பிரதான்.

தோ்வு முறையை முழுமையாக மாணவா்களை மையமாகக் கொண்டதாக அவா் மாற்றினாா். இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்றும் நமது இலக்கில் கல்வித் துறைக்கு பொறுப்பு வகித்து அவா் மேற்கொண்ட முன்முயற்சிகள் மிகவும் முக்கியமானவை’ என்று கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.