ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அவைக்கு வர அமித் ஷாவுக்குத் துணிச்சல் இல்லை: ராகுல் விமர்சனம்!

நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பற்றி கருத்துத் தெரிவித்த ராகுல்..

Rahul gandhi in LS

ராகுல் காந்தி - X

Published On :12 ஆகஸ்ட் 2026, 2:01 pm IST

நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உரையைக் கேட்க எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான காவல் துறையின் தாக்குதல், அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், இன்று அவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உரையைக் கேட்க எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை என்று ராகுல் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அமித் ஷா உத்தரவிட்டிருந்தால் அவர் குற்றவாளி என்றும், உத்தரவிடவில்லை என்றால் அவர் திறமையற்றவர் என்றும், எந்த நிலையிலும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

அமித் ஷாவின் பிம்பம் எனும் "பலூன்" காற்றிறங்கி விட்டதாகவும், அதில் மீண்டும் காற்றை நிரப்பக் கடைசி முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தோல்வியடைந்து "பலூன் வெடித்துவிட்டது". அமித் ஷாவுக்குத் துணிச்சல் இல்லை, அவரால் அவைக்கு வர முடியாது என்று ராகுல் குறிப்பிட்டார்.

மாணவர் போராட்டங்கள் உள்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக அமித் ஷா கூறியதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் இந்தக் கருத்துகள் வெளியாகின.

எதிர்க்கட்சிகள் இதுகுறித்து மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் பிற்பகல் 2 மணிக்குள் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தால், இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை விவாதத்தை நடத்தலாம் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.