ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!

மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்றுள்ளது பற்றி...

Officials with the newly appointed Union Education Minister Pralhad Joshi.

புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன் அதிகாரிகள். - படம் - ஏஎன்ஐ

Published On :26 ஜூலை 2026, 1:26 pm IST

மத்திய கல்வித்துறையின் புதிய அமைச்சராக பிரகலாத் ஜோஷி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) பொறுப்பேற்றுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜூன் 20 முதல் தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தி வந்த போராட்டம் நாடு முழுவதும் பரவியது.

இந்தக் கோரிக்கையை முன்நிறுத்தி நாடு முழுவதும் உள்ள மாணவர் அமைப்பினர், அரசியல் கட்சிகள் போன்றவை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, மாணவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று மத்திய கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை நேற்று (ஜூலை 25) ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைப்படி, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், மத்திய கல்வித்துறையின் புதிய அமைச்சராக பிரகலாத் ஜோஷி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்ற முதல் நாளிலேயே கல்வித்துறை சார்ந்த மூத்த அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

தற்போது அவர் மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Pralhad Joshi assumed office as the new Union Minister of Education on Sunday (July 26).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.