
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்வி
சிஜேபி போராட்டத்தில் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பியது பற்றி...
அமித் ஷாவுக்கு ராகுல் கேள்வி - கோப்புப் படம்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு யார் ஒப்புதல் அளித்தது எனக் கேள்வியெழுப்பி மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, "தில்லியில் ஜூலை 20-ல் மாணவர்களின் அமைதியான போராட்டத்தில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குப் பொறுப்புக்கூற வேண்டும்.
நியாயமான மற்றும் பொறுப்புக் கூறல் இருக்கும் கல்விமுறையைத்தான் எங்கள் மாணவர்கள் கோரினர். அவர்களின் குரல்களைக் கேட்பதற்குப் பதிலாக, அவர்கள் மீது கொடிய ஆயுதங்கள் மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் உள்ளிட்ட கண்மூடித்தனமான தாக்குதலை பாதுகாப்புப் படைகள் நடத்தின. இதில் நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்தனர்; காவல்துறையினரால் பெண்களிடம் காவல்துறையினர் அத்துமீறலுடன் தாக்கியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, மாணவர்களின் மீது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. பெல்லட் துப்பாக்கியால் ஒரு பத்திரிகையாளர் உள்பட பலரும் படுகாயமடைந்தது சமூக ஊடகங்கள் வாயிலாகத் தெரிகிறது. பெல்லட் துப்பாக்கியால் சுடப்பட்டு, தற்போது ஒரு கண்ணை இழக்கும் தருவாயில் உள்ள 19 வயது மாணவர் சாஹிலை நான் சந்தித்தேன்.
தில்லியில் பணியிலுள்ள பாதுகாப்புப் படைகள் உங்களின் (அமித் ஷா) கட்டுப்பாட்டில் இருப்பவை என்பதால் கேட்கிறேன்:
மாணவர்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்ட உயிர்க்கொல்லி ஆயுதங்களைப் பயன்படுத்த நீங்கள் ஒப்புதல் அளித்தீர்களா? இல்லையெனில், யார் ஒப்புதல் அளித்தது?
சீருடை இல்லாமல், சாதாரண உடையில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியவர்கள் காவல்துறையினரா? அல்லது தன்னார்வலர்களா? அவர்களைப் பணியமர்த்த அனுமதித்தது யார்?
அமைதியான போராட்டத்தில் போராட்டக்காரர்களைப் பாதுகாப்பதும், பேச்சுவார்த்தைகள் மூலம் அவர்களின் குறைகளைத் தீர்ப்பதும் அரசின் பொறுப்பு.
ஆனால், இத்தகைய கொடூரமான வன்முறையால் நாட்டின் ஒவ்வொரு நெறிமுறையும் தகர்க்கப்பட்டுள்ளது.
நாட்டின் எதிர்காலமான இளைஞர்களும் மாணவர்களும், வன்முறைக்கான பதிலையும் பொறுப்புக் கூறலையும் கோருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
Summary
Who gave the order? LoP Rahul Gandhi to Amit Shah over barbaric assault on students
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






