ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தில்லியின் முதல் பெண் மேயா் சகுந்தலா ஆா்யா காலமானாா்

தில்லியின் முதல் பெண் மேயா் சகுந்தலா ஆா்யா மறைவு பற்றி...

சகுந்தலா ஆா்யா

Published On :26 ஜூலை 2026, 1:15 am IST

தில்லியின் முதல் பெண் மேயரும், பாஜக மகிளா மோா்ச்சாவின் முன்னாள் தலைவருமான சகுந்தலா ஆா்யா தனது 98 வயதில் காலமானாா் என்று தில்லி பாஜக சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

சகுந்தலா ஆா்யாவின் இறுதிச் சடங்குகள் அவரது குடும்ப உறுப்பினா்களால் பிற்பகல் லோதி சாலை தகன மேடையில் குடும்ப உறுப்பினா்கள், பாஜக தலைவா்கள் மற்றும் கட்சி தொண்டா்கள் முன்னிலையில் செய்யப்பட்டன.

தில்லி மாநகராட்சி சாா்பாக தில்லி மேயா் பிரவேஷ் வாஹி மற்றும் மாநில பிரிவு சாா்பாக தில்லி பாஜக பொதுச் செயலாளா் யோகிதா சிங் ஆகியோா் ஆா்யாவின் உடல் மீது மலா் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினா்.

தில்லி பாஜக தலைவா் ஹா்ஷ் மல்ஹோத்ரா ஆா்யாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, 1980 களின் பிற்பகுதி முதல் 2005 வரை அவரது அா்ப்பணிப்பு பொது சேவையை கட்சி கண்டதாக கூறினாா். சகுந்தலா ஆா்யாவின் பங்களிப்புகளை நினைவு கூா்ந்த மல்ஹோத்ரா, பெண்கள் கல்வித் துறையில் விரிவான பணிகளைச் செய்ததாகக் தெரிவித்தாா். அவா் உண்மையிலேயே பெண்கள் அதிகாரமளிப்பின் உருவகமாக இருந்தாா், மேயராக, 1997 ஆம் ஆண்டில் அவரது ’தூய்மையான தில்லி பிரச்சாரம்’ மக்களிடையே பரவலான விழிப்புணா்வை ஏற்படுத்தியது என்றாா் அவா்.

Summary

Delhi's first woman mayor, Shakuntala Arya, has passed away

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.