ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாணவர்களை மிரட்டும் துணிச்சல் பல்கலைக்கு எப்படி வந்தது? எச்சரிக்கும் ராகுல்!

மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தில்லி பல்கலைக்கு ராகுல் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி..

Rahul Gandhi

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Published On :24 ஜூலை 2026, 1:00 pm IST

ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தும் மாணவர்களை மிரட்ட பல்கலைக்கழகத்திற்கு எப்படித் துணிச்சல் வந்தது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் போராட்டம் நாளுக்குநாள் வலுத்துவரும் நிலையில், தில்லி ஜந்தநர் மந்தரில் நடைபெறும் போராட்டங்களிலிருந்து தில்லி பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் விலகி இருக்குமாறு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் இந்த செயலை ராகுல் காந்தி கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தியின் எக்ஸ் பதிவில்,

ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தும் மாணவர்களை "மிரட்ட" பல்கலைக்கழகத்திற்கு எப்படித் துணிச்சல் வந்தது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

நினைவில் கொள்ளுங்கள், நேரம் வரும்போது நீங்கள்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். போராட்டத்திலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்திய தில்லி பல்கலையின் சமூக ஊடகப் பதிவையும் இத்துடன் இணைத்துள்ளார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

வியாழனன்று இரவு தில்லி பல்கலைக்கழகம் வெளியிட்ட பதிவுக்குப் பதிலளிக்கும் விதமாகவே அவரது கருத்துகள் வெளியாகியுள்ளன.

தில்லி பல்கலை வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

அன்புள்ள மாணவர்களே, ஆசிரியர்களே உங்கள் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் புது தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத போராட்டங்கள் சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கக்கூடும் என்பதைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.

இத்தகைய நடவடிக்கைகள் மாணவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்குப் பெரும் ஆபத்தை விளைவிப்பதோடு, அவர்களின் கல்வி முன்னேற்றம், தொழில்முறை வாய்ப்புகளையும் கணிசமாகப் பாதிக்கக்கூடும்.

எனவே, மாணவர்களும் ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்து விலகி இருக்குமாறும், தங்கள் பாதுகாப்பிற்கும் சட்டத்தைக் கடைப்பிடிப்பதற்கும் முன்னுரிமை அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், சூழ்நிலையைத் தூண்டும் வகையில் ஏராளமான போலியான, தவறான தகவல்கள் உருவாக்கப்பட்டுப் பரப்பப்பட்டு வருவதால், மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

With the Delhi University urging students to "stay away" from Jantar Mantar protests, Congress leader Rahul Gandhi on Friday slammed the varsity and asked how dare it "threaten" students for exercising their democratic rights.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.