ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நீதிமன்ற நடவடிக்கைகளை காணொலி பதிவு செய்யவும் பகிரவும் தடை: உச்ச நீதிமன்றம்

நீதிமன்ற நடவடிக்கைகளை காணொலி பதிவு செய்யவும் பகிரவும் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் - file photo

Published On :24 ஜூலை 2026, 4:07 pm IST

பொழுதுபோக்கு தளமல்ல, நீதிமன்ற நடவடிக்கைகளை காணொலியாக பதிவு செய்யவும் அதனை பகிரவும் தடை விதித்து உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், நீதிமன்ற நடவடிக்கைகளை செய்தியாக வெளியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை, இது பேசுவதற்கு எதிரான உத்தரவாகக் கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகளை விடியோ - ஆடியோ பதிவு செசய்து, அதனை நீதிமன்ற அனுமதியின்றி, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யக் கூடாது என்று தடை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலை ஒளிபரப்பு செய்வது, காணொலிகளை வெளியிடுவது போன்றவற்றில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோல்மால்யா பகசி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளை காணொலியாகப் பதிவு செய்து, அதில் குறிப்பிட்ட நிகழ்வு வெட்டி எடுப்பது, மாற்றியமைப்பது, வெளியிடுவது, பதிவு செய்வது, மீள் பதிவு செய்வது, பதிவேற்றம் செய்வது, நீதிமன்ற நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்களில் விடியோ அல்லது ஆடியோ வடிவில் பதிவேற்றி வருவாய் திரட்டுதல், இதர டிஜிட்டல் தளங்களில் பதிவிடுவது உள்ளிட்டவற்றை உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் உரிய அனுமதி பெறாமல் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இந்த உத்தரவு, நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிடுவதற்கு எதிரான தடை உத்தரவு அல்ல, பேசுவதற்கு எதிரான உத்தரவாகவும் இதனை கருத்தில் கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்ற காட்சிகளை பகுதியாகவோ, மாற்றம் செய்தோ வெளியிட்டு, அதனால் நீதிமன்ற மாண்பைக் குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக் கோரி, செய்தியாளர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.