ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விமான நிலையங்களை இயக்குவோருக்கு விமான போக்குவரத்துகளை நடத்தவும் அனுமதி? அதானி, ஜிஎம்ஆர் குழுமங்களுக்கு லாபம்!

விமான நிலையங்களை இயக்குவோருக்கு விமான போக்குவரத்துகளை நடத்தவும் அனுமதிக்கும் வகையில் கொள்கைகளில் திருத்தம் செய்யப்படவுள்ளது குறித்து...

Permission for airport operators to run flight operations too Profits for Adani and GMR groups

கோப்புப் படம்

Published On :23 ஜூலை 2026, 12:15 pm IST

விமான நிலையங்களை இயக்குவோருக்கு விமான போக்குவரத்துகளை நடத்தவும் அனுமதிக்கும் வகையில் கொள்கைகளில் திருத்தம் செய்ய விவாதித்து வருவதாகக் கூறப்படுகிறது.

உள்நாட்டு போட்டியை அதிகரிக்க முயற்சி செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையால் அதானி குழுமம், ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ் குழுமங்கள் லாபம் ஈட்டவுள்ளன.

தற்போதைய விதிகளின்படி, தில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களை நடத்துபவர்கள் எந்தவொரு விமான நிறுவனத்திலும் 10% க்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று, சம்பந்தப்பட்ட நபர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் பங்குகள் 3.7% வரை சரிந்து, கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சியை நோக்கிச் சென்றன.

விமான போக்குவரத்துகளை நடத்துவதற்கான உரிமை தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், மும்பை விமான நிலையம் மற்றும் பிற ஏழு விமான நிலையங்களை இயக்கும் அதானி குழுமம் மற்றும் புது தில்லி விமான நிலையம் உள்ளிட்ட நான்கு விமான நிலையங்களை நிர்வகிக்கும் ஜிஎம்ஆர் (GMR) ஏர்போர்ட்ஸ் நிறுவனங்களால் விமான நிறுவனங்களைச் சொந்தமாக வைத்திருக்க முடியும்.

உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சேவையில் ஏறக்குறைய 90 சதவீதத்தை இண்டிகோ மற்றும் ஏர் இந்தியாஆகிய நிறுவனங்களே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூழலில், சந்தையில் போட்டியை விரிவுபடுத்தும்நோக்கத்தில் இக்கொள்கையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

Summary

Permission for airport operators to run flight operations too Profits for Adani and GMR groups

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.