
இனி போராட்டக் களத்தில் மட்டுமே பேச்சுவார்த்தை! சிஜேபி அறிவிப்பு
அரசுடான பேச்சுவார்த்தை போராட்டக் களத்தில் மட்டுமே நடக்கும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது குறித்து...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே - பிடிஐ
மத்திய அரசுடன் இனி போராட்டக்களத்தில் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
முதல் கட்ட பேச்சுவார்த்தை மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா இல்லத்தில் நடைபெற்ற நிலையில், மீண்டும் அவரின் இல்லத்தில் பேச்சுவர்த்தை நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜந்தர் மந்தரில் மாணவர்கள் ஆதரவு நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் நடத்தத் தயார் என அமைச்சர் ஜெ.பி. நட்டா கூறியிருந்தார். இந்நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இவ்வாறு அறிவித்துள்ளது.
நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் ஜூன் 20 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் கலந்துகொண்டு உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவரின் உண்ணாவிரதப் போராட்டத்தின் 20ஆம் நாளில் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
முன்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவையடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்தவாறு இன்று (ஜூலை 22) 26 வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர்.
இந்தப் பேரணியில் ஈடுபட்ட இளைஞர்களை காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் தடுத்தனர். பெண்கள் உள்பட சிறுமிகளின் மீதும் காவல்துறை தாக்குதல் நடத்தியது. இதில் இளைஞர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.
எனினும் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு திரைப் பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் ஜெ.பி. நட்டா, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் விவாதிக்கவும் தயார் எனக் கூறினார். இதனிடையே மத்திய அரசுடன் இனி போராட்டக்களத்தில் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
Summary
Negotiations only on the protest grounds from now on! cockroach janata party announces
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






