ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிஜேபி போராட்டத்தில் 4 வாசகங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! என்னென்ன?

ஜந்தர் மந்தரில் 4 வாசகங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என சிஜேபி செய்தித்தொடர்பாளர் கூறியது குறித்து...

cockroach janata party protest

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் - பிடிஐ

Published On :22 ஜூலை 2026, 8:19 pm IST

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திவரும் போராட்டத்தில் 4 வாசகங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அஷுதோஷ் ரன்கா அறிவுறுத்தியுள்ளார்.

போராட்டத்திற்கு தொடர்பில்லாதவர்களை ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் அனுமதிக்க முடியாது என்றும், வேறு வாசகங்களை ஏந்தி போராடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் ஜூன் 20 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் கலந்துகொண்டு உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவரின் உண்ணாவிரதப் போராட்டத்தின் 20ஆம் நாளில் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் இருந்தவாறு இன்று (ஜூலை 22) 25 வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி நேற்று பேரணியில் ஈடுபட்டனர்.

இந்தப் பேரணியில் ஈடுபட்ட இளைஞர்களை காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் தடுத்தனர். பெண்கள் உள்பட சிறுமிகளின் மீதும் காவல்துறை தாக்குதல் நடத்தியது. இதில் இளைஞர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம், காவல் துறையினர் மீது போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக இன்று செய்திகள் வெளியாகின. காவல் துறை மீது தாக்குதல் நடத்துவதைப்போன்ற காட்சிகளும் இணையத்தில் வலம் வந்தன.

இந்நிலையில் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் 4 வாசகங்களை மட்டுமே ஏந்தியிருக்க வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஷுதோஷ் ரன்கா அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, இன்குலாப் ஜிந்தாபாத், பாரத் மாதா கி ஜே, ஜெய் பீம், தர்மேந்திர பிரதானே பதவி விலகு என நான்கு வாசகங்களை மட்டுமே ஒட்டியிருக்க வேண்டும், பதாகைகளாக கையில் ஏந்தியிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சில போராட்டக்காரர்கள் அஸாடி (விடுதலை) என முழக்கமிட்டுவரும் நிலையில், 5வது வாசகங்களை ஒருபோதும் இக்களத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Summary

Only four slogans should be featured in the CJP protest

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.