ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கேத்தனைக் கொல்ல கூலிப்படை! கைதாவதற்கு முன்பு சியா பார்த்த விடியோ விவரங்கள் கசிந்தன

கேத்தனைக் கொல்ல கூலிப்படை தேடியதும், கைதாவதற்கு முன்பு சியா பார்த்த விடியோ விவரங்கள் பற்றி..

Ketan - Siya

கேத்தன் - சியா - file photo

Published On :21 ஜூலை 2026, 3:02 pm IST

கேத்தனைக் கொல்ல கூலிப்படை தேடிய சியா! கைதாவதற்கு முன்பு பார்த்த விடியோ விவரங்கள் கசிந்தன

புனேவில், இளம் தொழிலதிபர் கேத்தனைக் கொலை செய்ய சியா கோல் கூலிப்படையை தேடிய தகவலும், கைதாவதற்கு முன்பு சீன விடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

சியா கோயல், ஒரு கூலிப்படையினரைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் கேத்தனைக் கொலை செய்யுமாறு கூறியிருக்கிறார். ஆனால், கூலிப்படையைச் சேர்ந்தவர், கேத்தனைப் பற்றி தெரிந்து கொண்டு, பிறகு அவரைக் கொலை செய்ய முடியாது என்று மறுத்துவிட்டிருக்கிறார்.

இவர்தான், தற்போது கேத்தன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியமாக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல, சியா கோயல் - சேத்தன் இருவரும், கூலிப் படையினரை ஒரு விடுதிக்கு வரவழைத்துப் பேசியிருக்கிறார்கள். அங்குப் பதிவான சிசிடிவி காட்சிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.

கேத்தன் கொலை வழக்கில் கைதான இருவருமே கைதானால் விசாரணையின்போது,எவ்வாறு அமைதியாக பதில் சொல்வது, அச்சமடையாமல் இருப்பது போன்ற விடியோக்களை செல்போனில் பார்திருப்பதும் காவல்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, அவர்களது செல்போனில் சியா - சேத்தன் திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படங்களும் இருப்பதாகவும், அவை உண்மையானவையோ கணினியில் உருவாக்கப்பட்டதா எனவும் விசாரிக்கப்பட்டு வருகிறதாம்.

முதற்கட்ட விசாரணையில், அவர்கள் 2025ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள கோயிலில் ரகசிய திருமணம் செய்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்தக் கோயிலில் சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு வருகிறது. இவர்களது நீதிமன்ற காவல் ஜூலை 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Summary

Hit squad to kill Kethan! Details of the video Sia watched before her arrest have leaked.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.