ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமடைவதற்குள் வேறு மருத்துவமனைக்கு மாற்றக்கோரி இன்று அவசர வழக்காக விசாரிக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், ஜூலை 24க்கு ஒத்திவைப்பு...

 Sonam Wangchuk

சோனம் வாங்சுக் உடன் அவரின் மனைவி கீதாஞ்சலி ஜே ஆம்கோ - பிடிஐ

Published On :19 ஜூலை 2026, 4:57 pm IST

சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஜூலை 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைவதற்குள் தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க உடனடி விசாரணை கோரி அவரின் மனைவி இன்று (ஜூலை 19) மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் ஜூலை 24 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சோனம் வாங்சுக் மருத்துவ அறிக்கைகளை அவரின் குடும்பத்துக்கு வழங்க அரசுத் தரப்பு உறுதி அளித்துள்ளது.

இதுமட்டுமின்றி சோனம் வாங்சுக் சிகிச்சைப் பெற்றுவரும் சஃப்தார்ஜங் மருத்துவமனைக்கு வெளியே காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் வழக்குரைஞர் கபில் சிபல் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீது அரசுத்தரப்பு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீட் முறைகேடுகளைக் கண்டித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் கடந்த ஜூன் 20 ஆம் தேதி தில்லி ஜந்தர் மந்தர் திடலில் போராட்டத்தைத் தொடங்கினர்.

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்தில் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தில்லியில் உள்ள சஃப்தார்ஜங்க் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சோனம் வாங்சுக் உடல்நிலை குறித்து அரசு மருத்துவமனையில் போதிய தகவல்களை தர மறுப்பதால், அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லை என அவரின் மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ தெரிவித்திருந்தார்.

சோனம் உடல்நிலை குறித்து ஒரு குறிப்பிட்ட தகவல்களை மட்டுமே அளிப்பதால், அவரின் உடல்நிலை மேலும் மோசமடைவதற்குள் தனியார் மருத்துவமனையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், சிகிச்சையின் நிலை குறித்தும் உடல்நிலை குறித்தும் தெரிந்துகொள்ள தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், உடனடியாக இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்பதைக் குறிப்பிடும் வகையில் ஜூலை 24 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.

Summary

Hearing on plea to Transfered Sonam Wangchuk to another hospital adjourned Cockroach Janata Party

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.