ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மருத்துவமனையிலும் தொடரும் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதம்!

மருத்துவமனையிலும் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளது குறித்து...

sonam wangchuk

ஆர்வலர் சோனம் வாங்சுக்...

Published On :18 ஜூலை 2026, 5:43 pm IST

மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, தில்லியின் ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் மற்றும் சோனம் வாங்சுக் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, கடந்த ஜூன் 28 முதல் சோனம் வாங்சுக் கடைபிடித்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் (ஜூலை 18) 21 ஆம் நாளை எட்டிய நிலையில், தில்லி காவல் துறையினரால் அவர் ஜந்தர் மந்தரில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக் அவரது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ளவில்லை எனவும், அங்கிருந்தபடி போராட்டத்தை அவர் தொடர்வதாகவும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி தற்போது அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, மருத்துவமனையில் சோனம் வாங்சுக்கிற்கு வழங்கப்படும் சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி அவரது மனைவி கீதாஞ்சலி குற்றஞ்சாட்டினார்.

மேலும், தில்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக்கிற்கு தாமதமின்றி சிகிச்சையைத் தொடங்க அனுமதிக்குமாறு மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Sonam Wangchuk, who has been forcibly admitted to the hospital, is continuing his hunger strike.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.