ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தாமதமின்றி சிகிச்சை தொடங்க வாங்சுக் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் வேண்டுகோள்!

வாங்சுக்கிற்கு தாமதமின்றி சிகிச்சை தொடங்க மருத்துவர்கள் வலியுறுத்தியது பற்றி..

Sonam Wangchuk

மருத்துவ பரிசோதனையில் சோனம் வாங்சுக் - பிடிஐ

Published On :18 ஜூலை 2026, 4:10 pm IST

தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு தாமதமின்றி சிகிச்சையைத் தொடங்க அனுமதிக்குமாறு மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் வலியுறுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை எதிர்த்து, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் கடந்த ஜூன் 20 ஆம் தேதியில் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தைத் தொடங்கினர். கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்தில் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே. ஆங்மோ, அவரது மருத்துவச் சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றம் சாட்டி, தனது அனுமதியின்றி எந்த சிகிச்சையும் அளிக்கக்கூடாது என்றும், அவரை மருத்துவமனையிலிருந்து விடுவிக்குமாறும் கோரினார்.

உண்ணாவிரதத்தின்போது அதிகரிக்கக்கூடிய நீர்ச்சத்து குறைபாடு, குறைந்த பொட்டாசியம் அளவு மற்றும் அதிகரிக்கும் கீட்டோன் அளவுகள் ஆகியவற்றை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இவை நீர்ச்சத்து குறைபாட்டுடன் இணைந்து கணிசமாக அதிகரிக்கும்போது, ​​சிறுநீரக செயல்பாடு, பிற வளர்சிதை மாற்றச் சிக்கல்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவித்தது.

மேலும், தாமதமின்றி சிகிச்சையைத் தொடங்க அனுமதிக்குமாறு மருத்துவமனை நிர்வாகம் அவரது குடும்பத்தினரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் 21-வது நாளில் சமூக ஆர்வலர் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளின் அடிப்படையில், காவல்துறையினரால் அவர் அரசு மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டார்.

Activist Sonam Wangchuk, admitted to Safdarjung Hospital after a 20-day hunger strike on Saturday, is under close medical observation as doctors counsel his family to allow treatment to begin without further delay, sources said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.