ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்: மாநிலங்களவையில் மசோதா இன்று தாக்கல்!

தேசிய பாடலான வந்தே மாதரத்தை அவமதிப்பது அல்லது அந்தப் பாடல் பாடப்படும்போது இடையூறு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் மசோதாவை, மாநிலங்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

Published On :20 ஜூலை 2026, 4:34 am IST

தேசிய பாடலான வந்தே மாதரத்தை அவமதிப்பது அல்லது அந்தப் பாடல் பாடப்படும்போது இடையூறு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் மசோதாவை, மாநிலங்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

தேசிய கெளரவம் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின்படி தேசிய கொடி, அரசமைப்புச் சட்டம், தேசிய கீதம் ஆகியவற்றை சேதப்படுத்தினால் அல்லது அவமதித்தால், 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

இதே சட்ட பாதுகாப்பை வந்தே மாதரம் பாடலுக்கும் அளிக்கும் நோக்கில், தேசிய கெளரவம் அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026-ஐ, மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை தாக்கல் செய்ய உள்ளாா்.

இந்த மசோதாவின்படி, வந்தே மாதரம் பாடலை அவமதிப்பது அல்லது அந்தப் பாடல் பாடப்படும்போது இடையூறு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். தேசிய கீதமான ‘ஜன கண மன’-வுக்கு உள்ள சட்டப் பாதுகாப்பை வந்தே மாதரத்துக்கும் அளிக்க, இந்த மசோதா வழிவகை செய்கிறது.

பக்கிம் சந்திர சாட்டா்ஜியால் இயற்றப்பட்ட வந்தே மாதரம் பாடல், கடந்த 1875-ஆம் ஆண்டு நவம்பரில் வங்கதா்ஷன் இலக்கிய இதழில் முதல்முறையாக வெளியிடப்பட்டது. அந்தப் பாடல் வெளியிடப்பட்டு 150 ஆண்டுகளான நிலையில், தற்போது இந்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது.

முன்னதாக ஜன கண மன பாடப்படும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் கட்டாயம் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் அல்லது இசைக்கப்பட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.