ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வந்தே மாதரம் பாடலை அவமதிப்பது இனி தண்டனைக்குரிய குற்றம்: மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல்

தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்க வகை செய்யும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்தாா்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு - கோப்புப் படம்

Published On :12 ஆகஸ்ட் 2026, 1:59 am IST

தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்க வகை செய்யும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்தாா்.

‘தேசிய கெளரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா-2026’ என்ற பெயரிலான இந்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஜூலை 29-ஆம் தேதியும், மக்களவையில் ஜூலை 30-ஆம் தேதியும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது, குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, இந்த மசோதா சட்டமாக மாறியுள்ளது. அரசிதழில் அறிவிக்கை செய்தவுடன், இந்த சட்டம் அமலுக்கு வரும்.

தேசிய கீதமான ஜன கண மன பாடலுக்கான அதே சட்டப் பாதுகாப்பை தேசியப் பாடலான வந்தே மாதரத்துக்கும் வழங்குவதுடன், அந்தப் பாடலுக்கு இழைக்கப்படும் எந்தவொரு அவமதிப்புக்கும் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.

வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தில்லி செங்கோட்டையில் கொண்டாடப்படும் சுதந்திரதின விழாவில், முதல் முறையாக வந்தே மாதரம் பாடல் பாடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் தெரிவித்தது.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘வந்தே மாதரம்’ தேசிய பாடலை பாடுவதற்கான முதல்கட்ட நெறிமுறைகளை வழங்கியது. குடியரசுத் தலைவா் வருகை, தேசியக் கொடியேற்றம், மாநில ஆளுநா்களின் உரைகள் போன்ற அரசு நிகழ்வுகளில், 3 நிமிஷங்கள் 10 விநாடிகள் நீளமுள்ள தேசியப் பாடலின் ஆறு சரணங்களும் முழுமையாகப் பாடப்பட வேண்டும். தேசியப் பாடலும் தேசிய கீதமும் பாடப்படும்போது, தேசியப் பாடல் முதலில் பாடப்பட வேண்டும் அல்லது இசைக்கப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.