ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ராஜஸ்தானில் விடுதி உணவகத்திற்குள் நுழைந்த முதலை: அச்சத்தில் சிதறி ஓடிய சமையல்காரர்கள்

கோட்டா விடுதி உணவகத்திற்குள் நுழைந்த முதலை.....

Crocodile strolls into Kota hostel mess, cooks flee in panic

விடுதியில் நுழைந்த முதலை.... - Photo grab X Video.

Published On :19 ஜூலை 2026, 3:42 pm IST

கோட்டா விடுதி உணவகத்திற்குள் நுழைந்த முதலையைக் கண்டு சமையல்காரர்கள் அச்சத்தில் சிதறி ஓடினர்.

ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள மாணவர் விடுதி ஒன்றின் தரைத்தளத்தில் அமைந்திருந்த உணவகத்திற்குள் 4 அடி நீளமுள்ள முதலை ஒன்று திடீரென நுழைந்தது. இதனைக் கண்ட சமையல்காரர்கள் அச்சத்தில் சிதறி ஓடினர். கோரல் பூங்கா பகுதியில் உள்ள மாணவர் விடுதியில் இந்தச் சம்பவம் நடந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அந்த முதலை எதிர்பாராத விதமாக விடுதிக்குள் நுழைந்ததால் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. முழு சம்பவமும் உணவகத்திற்குள் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. முதலை, படிக்கட்டுகளில் மெதுவாக இறங்கி தரைத்தளத்தில் உள்ள உணவருந்தும் பகுதிக்குள் நுழைவதை அந்தக் காட்சிகள் காட்டுகின்றன.

சமையல்காரர்களும் மற்ற ஊழியர்களும் அந்த முதலையைப் பார்த்த உடனேயே, சமையலறையை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு ஓடினர். சில நிமிடங்களிலேயே, இந்த செய்தி விடுதி முழுவதும் பரவியது. இதனால் அங்கு தங்கியிருந்து போட்டித் தேர்வுக்குப் பயிற்சி பெறும் மாணவர்கள் கட்டடத்தை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் வருவதற்கு முன்பு, சில மாணவர்கள் முதலையைத் தாங்களே பிடிக்க முயன்றனர். இருப்பினும், அவர்களின் முயற்சிகள் அந்த முதலை மேலும் பயமுறுத்தியதால், அது உணவகத்திற்குள் பதற்றத்துடன் அங்கும் இங்கும் ஓடியது. இது விடுதிக்குள் இருந்த குழப்பத்தை மேலும் அதிகரித்தது.

விடுதி வளாகத்திற்கு அருகில் செல்லும் பெரிய வடிகால் வழியாக முதலை உள்ளே நுழைந்திருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியிருப்பு வளாகத்திற்குள் வழிதவறி வந்த முதலை இறுதியில் தரைத்தளத்தில் உள்ள உணவகத்தை அடைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

வனத் துறையினருக்கு விடுதி நிர்வாகம் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கவனமாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு, முதலைக்கோ அல்லது அங்கிருந்தவர்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் அதிகாரிகள் முதலையை வெற்றிகரமாகப் பிடித்தனர்.

மீட்புப் பணி பாதுகாப்பாக நிறைவடைந்ததாகவும், பின்னர் அந்த முதலை அதன் இயற்கையான வாழ்விடமான சம்பல் ஆற்றில் விடப்பட்டதாகவும் வனத் துறை அதிகாரி வீரேந்திர சிங் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.

Summary

A 4-feet-long crocodile entered the basement mess of a boys' hostel in Kota, triggering panic among staff and students.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.