ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: இருவர் பலி; 100 பேர் காயம்

ஒடிஸாவின் புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலியானது குறித்து...

annual Rath Yatra

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை - கோப்புப் படம்

Published On :17 ஜூலை 2026, 8:42 am IST

ஒடிஸாவின் புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக புகழ்பெற்ற ஜெகந்நாதர் ரத யாத்திரை வியாழக்கிழமை (ஜூலை 16) காலை கோலாகலமாகத் தொடங்கியது. இந்த ரத யாத்திரையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர். இதனையடுத்து அங்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ரத யாத்திரையில் பங்கேற்க வந்த பலரும் ஒரே இடத்தில் குவிந்ததால் கோயிலுக்கு வெளியே கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. புரியின் படா தண்டா சாலைப் பகுதியில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் குவிந்ததில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலியாகினர். மேலும், கூட்டநெரிசலில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Summary

Puri Rath Yatra: At least 2 dead, over 100 devotees faint amid massive crowd

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.