ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னையில் கள்ளநோட்டுகள் பறிமுதல் விவகாரம்! பாக். பயங்கரவாதிகளுடன் தொடர்பா?

சென்னை திருவல்லிக்கேணியில் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து...

Counterfeit currency

கள்ளநோட்டுகள் - பிரதிப் படம்

Published On :17 ஜூலை 2026, 8:13 am IST

சென்னை திருவல்லிக்கேணியில் ரூ.11 லட்சம் கள்ள நோட்டுகள் வைத்திருந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணி சிஎன்கே சாலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் கள்ள நோட்டு கும்பல் பதுங்கியிருப்பதாக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை திருவல்லிக்கேணி போலீஸாா் உதவியுடன் திருவல்லிக்கேணியில் உள்ள அந்த விடுதியில் புதன்கிழமை (ஜூலை 15) திடீா் சோதனை நடத்தினா்.

சோதனையில் ஷபீக் ரகுமான் (37) என்பவரிடமிருந்து ரூ.11 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அனைத்து நோட்டுகளும் ரூ. 500 ஆக இருந்துள்ளன. இது தொடா்பாக ரகுமானை கைது செய்து, விசாரணை செய்தனா்.

இவர் டிராவல்ஸ் நிறுவனமும், ஜவுளி வியாபாரமும் செய்து வருவதும், தனது வியாபாரத்தின் வழியாக கள்ள நோட்டுகளை புழகத்தில் விடுவதும் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், ரகுமான் கொடுத்த தகவலின்பேரில், தஞ்சாவூரில் கள்ள நோட்டு வைத்திருந்ததாக ரவிச்சந்திரன் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.22.79 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் இவை அனைத்தும் உண்மையான நோட்டுகளாக இருந்தன.

தொடர்ந்து, இருவரிடமிருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட கடவுச்சீட்டுகளையும் (Passport - பாஸ்போர்ட்) போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அவர்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்களிடம் வினவியபோது முரணாகப் பதிலளித்தது சந்தேகத்தைக் கிளப்பியது.

அவர்கள் வெளிநாடுகளில் சந்தித்தவர்கள் குறித்து கேட்டபோதும் அவர்களிடம் பதில் இல்லை. மேலும், இவர்களின் கைப்பேசியில் உள்ள தொடர்புகளும் சந்தேகத்தைக் கிளப்புவதாகக் கூறப்படுகிறது. இதனிடயே, இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பேதும் இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

Counterfeit currency seizure in Chennai: Links to Pakistani terrorists?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.