ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்.. வழித்தடம், பயண நேரம், இயங்கும் முறை என அனைத்து விவரங்களும்!

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் எந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது, பயண நேரம், இயங்கும் முறை என அனைத்து விவரங்களும் வெளியாகியிருக்கிறது.

ஹைட்ரஜன் ரயில்

ஹைட்ரஜன் ரயில் - file photo

Published On :17 ஜூலை 2026, 11:38 am IST

பிரதமர நரேந்திர மோடியால் இன்று தொடங்கி வைக்கப்படவிருக்கும் தூய எரிபொருளான ஹைட்ரஜன் மூலம் இயங்கும் நாட்டின் முதல் ரயில் இயக்கப்படவிருக்கும் வழித்தடம், இயங்கும் நேரம், இயங்கும் முறை என அனைத்து விவரங்களும் வெளியாகி வருகிறது.

பன்முக பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த ரயில், ஹரியாணா மாநிலம், ஜிந்த் - சோனிபட் இடையே இயக்கப்படவிருக்கிறது. இந்த பயண தொலைவில் இரண்டு மணி நேரத்தில் ரயில் கடந்து செல்லும்.

ரயில் எண் 74010, ஹரியாணா மாநிலம் ஜிந்த் ரயில் நிலையத்திலிருந்து ஒவ்வொரு நாளும் காலை 7.40 மணிக்குப் புறப்பட்டால், சோனிபட் வர காலை 9.40 மணியாகும்.

மறுவழித்தடத்தில் 74009 ரயில் எண் சோனிபட்டிலிருந்து காலை 10.40 மணிக்குப் புறப்பட்டு 1 மணிக்கு ஜிந்த் வந்தடையும்.

ஜிந்த் நகரம், பாண்டு, பின்டாரா, லலித் கேரா, புடானா, கோஹானா, லத், மோஹானா, பர்வன்ஸி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

எப்படி இயங்கும்?

வழக்கமான மின்சார ரயில்கள், மேல்நிலை மின்கம்பிகளில் இருந்து மின்சாரத்தைப் பெறுவது போலல்லாமல், ஹைட்ரஜன் ரயிலானது ஹைட்ரஜன்-ஆக்ஸிஜன் வேதிவினை மூலம் ரயிலுக்குள்ளேயே மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தும்.

1,200 கிலோவாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல உந்துவிசை அமைப்பின் மூலம் இயங்கும் இந்த ரயில், மணிக்கு 75 கிலோ மீட்டா் வரையிலான வேகத்தில் செல்லும். 10 பெட்டிகளுடன் சுமாா் 2,600 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாகும். ஜிந்த்-சோனிபட் நகரங்களுக்கு இடையிலான 89 கி.மீ. தொலைவை 2 மணிநேரத்தில் கடந்து செல்கிறது.

சிறப்பம்சங்கள் என்ன?

ஹைட்ரஜன் கசிவுகள், வெப்பம், தீப்பிழம்புகள், புகையை முன்கூட்டிக் கண்டறியும் பன்முகப் பாதுகாப்பு அமைப்புகளுடன், பாதுகாப்பான ரயில் என்ற சிறப்பையும் கொண்டுள்ளது.

ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் நாடுகளான ஜொ்மனி, பிரான்ஸ், சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய வெகுசில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. ஜெர்மனிதான் இதில் முன்னோடி நாடு. இங்கு கடந்த 2018-இல் உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

first hydrogen train all details route, time, operation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.