ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்

ஹைட்ரஜன் மூலம் இயங்கும் நாட்டின் முதல் ரயில் சேவையை பிரதமா் மோடி தொடக்கிவைத்தது குறித்து...

PM Modi flags off the country's first hydrogen-powered train

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடக்கிவைப்பு

Published On :17 ஜூலை 2026, 12:03 pm IST

தூய எரிபொருளான ஹைட்ரஜன் மூலம் இயங்கும் நாட்டின் முதல் ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் 10 பெட்டிகளைக் கொண்ட, பன்முக பாதுகாப்பு அம்சங்களுடன் ஹரியாணா மாநிலம், ஜிந்த் - சோனிபட் இடையேயான ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

இதன் மூலம் தூய எரிசக்திக்கு மாறும் இந்தியாவின் லட்சியப் பயணம் மற்றும் நிலையான - பசுமையான ரயில் போக்குவரத்துக்கான புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது.

மேல்நிலை மின்கம்பிகளில் இருந்து மின்சாரத்தைப் பெறும் வழக்கமான மின்சார ரயில்களைப் போலல்லாமல், ஹைட்ரஜன் ரயிலானது ஹைட்ரஜன் - ஆக்ஸிஜன் வேதிவினை மூலம் ரயிலுக்குள்ளேயே மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தும்.

1,200 கிலோவாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல உந்துவிசை அமைப்பின் மூலம் இயங்கும் இந்த ரயில், மணிக்கு 75 கிலோ மீட்டா் வரையிலான வேகத்தில் செல்லும். 10 பெட்டிகளுடன் சுமாா் 2,600 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாகும். ஜிந்த்-சோனிபட் நகரங்களுக்கு இடையிலான 89 கி.மீ. தொலைவை 2 மணிநேரத்தில் கடக்கும்.

ஹைட்ரஜன் கசிவுகள், வெப்பம், தீப்பிழம்புகள், புகையை முன்கூட்டிக் கண்டறியும் பன்முகப் பாதுகாப்பு அமைப்புகளுடன், பாதுகாப்பான ரயில் என்ற சிறப்பையும் கொண்டுள்ளது.

இந்தியாவில் தற்போது 99 சதவீதத்துக்கும் மேற்பட்ட அகல இருப்புப் பாதை வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், மாசில்லா ரயில் இயக்கத்துக்கான அடுத்தகட்ட பாய்ச்சலை இந்திய ரயில்வே முன்னெடுத்துள்ளது.

அதுமட்டுமின்றி, நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில், சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில்தான் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்டுள்ளது.

Summary

PM Narendra Modi flags off the country's first hydrogen-powered train from Jind to Sonipat

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.