ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஓய்வூதியம் பெறும் முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி! மகன் கணக்கில்?

ஓய்வூதியம் பெற வந்த முதியவரின் வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி இருப்பதாக வந்த தகவலால்..

வங்கிப் பணி

வங்கிப் பணி - file photo

Published On :15 ஜூலை 2026, 3:19 pm IST

மாத ஓய்வூதியத்தை எடுக்க வங்கிக்கு வந்த முதியவருக்கு, அவரது வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி இருப்பதாக ஊழியர்கள் சொன்னபோது, ஒரு சில விநாடிகள் இதயம் நின்று பிறகு துடித்திருக்கலாம்.

பிகார் மாநிலம் முஸாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காமேஷ்வர் மிஸ்ரா என்பவர், முதியோருக்கான ஓய்வூதியத் தொகையை பெற்று வருகிறார். அந்தத் தொகையை பெறுவதற்கு பொதுச் சேவை மையத்துக்கு வந்த காமேஷ்வர், ஓய்வூதியத் தொகையை எடுத்துக் கொண்டு நேராக வீட்டுக்கு வராமல், தன்னுடைய வங்கிக் கணக்கில் மீதம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று அறிந்து கொள்ள விரும்பினார். வங்கி ஊழியரிடம் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று அவர் சாதாரணமாகக் கேட்க, ஊழியரோ, ரூ.759 கோடி என்று சாதாரணமாகவே சொல்லிவிட்டார். பிறகுதான், சொன்னவருக்கும் அதனைக் கேட்டவருக்கும் அதிர்ச்சி.

சரி இது ஏதோ தொழில்நுட்பப் பிரச்னை என்று நனைத்து விட்டு விடாமல், காமேஷ்வருடன் வந்த மாற்றுத் திறனாளி மகன், தன்னுடைய வங்கிக் கணக்கு விவரங்களையும் கேட்டுள்ளார். அதிலும் என்ன சாதாரண தொகையா இருந்திருக்கும். அதிலும் மிகப்பெரிய தொகைதான் இருந்துள்ளது. இரண்டையும் கூட்டினால் கிட்டத்தட்ட ரூ.1500 கோடி அளவுக்கு வரும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

வேறு யாராக இருந்தாலும், அதில் பாதியை பணமாக எடுத்துக் கொண்டு வீட்டுக்கு விரைந்திருப்பார்கள். ஆனால், அவர்களோ, வங்கியிடம் இது குறித்து புகார் தெரிவித்து விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொழில்நுட்பப் பிரச்னையாகத்தான் இருக்கும் என்று நம்பும் தந்தையும் - மகனும் விரைவில் இந்த பிரச்னை சரி செய்யப்படும், எனினும் மக்களும் இதுபற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததாகக் கூறுகிறார்கள்.

Summary

A shock awaited a pensioner! Rs 759 crore in his bank account! And in his son's account?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.